இசிஆரில் பெண்கள் பயணித்த காரை, இளைஞர்கள் சிலர் அடங்கிய கார் துரத்தியதாக வீடியோ வைரலான விவகாரத்தில், நடந்தது என்ன என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கானத்தூர் காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ’’கடந்த 25.1.25 அன்று இரவு இந்த சம்பவம் தாம்பரம் ஆணையரக கானத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது.

காரை துரத்தி நியாயம்

பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்பு இரு தரப்பினரும் சமாதானம் ஆகியுள்ளனர்.

அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.