ஆழிப்பேரலையின் 21-ஆம் ஆண்டு நினைவு: கண்ணீர் கடலில் மிதந்த காரைக்கால் மாவட்டம்...

3 hours ago 1
ARTICLE AD

காரைக்கால்: 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக எழுந்த சுனாமி ஆழிப்பேரலைகள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளைக் கோரத்தாண்டவம் ஆடின. இந்த இயற்கை சீற்றத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோரப் பகுதிகள் பெரும் அழிவைச் சந்தித்தன. குறிப்பாக, காரைக்கால் மாவட்டத்தின் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடல் அலைக்குள் சிக்கித் தங்களது உயிரை இழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26.12.2025) 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட போதிலும், அந்தப் பாதிப்புகள் மீனவ மக்களின் மனதில் இன்னும் ஆறாத வடுவாகவே இருந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் நினைவாகக் காரைக்கால் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில், பலியானவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி

சுனாமி தாக்கியதன் 21-ஆம் ஆண்டு நினைவையொட்டி, இன்று காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள நினைவுச் சின்னத்தில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் தலைமை தாங்கி, மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன், ராஜசேகரன் உயர் அதிகாரிகள் சார்பு ஆட்சியர் M. பூஜா , எஸ்.எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா, காரைக்கால் வனப் பாதுகாப்பு அதிகாரி கணேசன், துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார்கள், மீனவப் பிரதிநிதிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பட்டினச்சேரியில் அமைதிப் பேரணி

இதேபோல், திருப்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட பட்டினச்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து அமைதிப் பேரணி நடத்தினார்கள். துக்கம் அனுசரிக்கும் வகையில் தங்களது சட்டைகளில் கருப்புப் பட்டை அணிந்து கொண்டு மௌனமாகச் சென்ற அவர்கள், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி நினைவு இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த அமைதிப் பேரணியை நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் காரைக்கால் மீன்வளத்துறை இணை இயக்குனர் நடராஜன், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்குத் தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.

அலைகளால் அள்ளப்பட்டுச் சென்ற உறவுகளை நினைத்து கடற்கரை ஓரம் இன்று மக்கள் எழுப்பிய அழுகுரல், 21 ஆண்டுகள் கடந்தும் அந்தத் துயரம் மாறவில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது. இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Read Entire Article