ஆளுநர் உரை ரீல்ஸ்க்கு உதவும்... ரியாலிட்டிக்கு உதவாது.! தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி

4 months ago 8
ARTICLE AD

ஆளுநர் உரை மீதான விவாதம் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்துள்ளது. எனவே ஆளுநர் உரை மீது பேசுவதற்காக இந்த 40 நாட்களில் என்ன திட்டம்.? என்ன சாதனை செய்தது என ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்து. அப்படி ஆளுநர் உரையில் எதுவும் இல்லை. எங்கள் கண்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

அதே நேரம் ஆளுநர் உரையின் போது துவக்கத்தில் தமிழ்தாய் தாய் வாழ்த்து பாடப்பட்டது. உடனடியாக தேசிய கீதம் பாடப்பட்டது. ஒரு முறை தமிழ்தாய் வாழ்த்து. இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த காலங்களில் இருந்த சட்டமன்றத்தில் வரம்பு மீறப்பட்டுள்ளது.  இதே கோரிக்கையை கடந்த ஆட்சி காலத்தில் ஆளுநர் வைத்திருந்தார். ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்து ஸ்டாலின் உறுதியாக இருந்து இறையான்மையை பாதுகாத்தோம். அமைச்சர்கள் பதவியேற்றது தான் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதனால் அங்கு அவர் கேட்டதற்கு இணங்க தேசிய கீதம், வந்தே மாதரம் பாடப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக நம்முடைய இடம். சட்டமன்றம் நம்முடைய இடம், எம்எல்ஏக்கள் பணி செய்கின்ற இடத்தில் தான் தேசிய கீதம் இரண்டு முறை வாசிக்கப்பட்டது. ஆளுநரிடம் கொடுக்க வேண்டிய ஏன்.? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர், நாட்டுப்பண் இரண்டு முறை பாடப்பட்டதில் என்ன தவறு.? எதற்காக தவறு என கூற வேண்டும்.? என விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, தமிழ் தாய் வாழ்த்து ஒருமுறை பாடப்பட்டது. தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்தையும் 2 முறையும் பாடியிருக்க வேண்டியது தானே, இதன் மூலம் தமிழ் தாய் வாழ்த்தை விட ஆளுநர் தான் முக்கியம் என்ற எண்ணம் மக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,  தமிழ் தாய் வாழ்த்து எங்களுடை முதல்வருக்கு உயிருக்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  தமிழக அரசு நிலையை பேசுகிறோம். 3, 4 வருடங்களாக தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. எந்தவித காம்பரமைஸ் இல்லை. கடந்த ஆட்சியில் ஆளுநர் முன்பு தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. ஆளுநர் புறக்கணித்து சென்ற பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் முன்பு தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது எங்களது வெற்றி. எந்த காம்பரைசும் செய்து கொள்ளவில்லை என ஆதவ் உறுதியாக கூறினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, கள யதார்த்திற்கும், நிஜத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. ஆளுநர் உரை அரசின் கொள்கை, திட்டம் போன்றவை அமைந்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் உரையில் அனைத்து தகவல்களும் ஆளுங்கட்சியினர்  ரீல்ஸ் போட உதவுமே தவிர ரியல் வாழ்க்கையில் உதவாது. எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியின் நிறை குறைகளை பேசுவது வழக்கம். இப்போது அளுங்கட்சி அதிக பொறுப்பும் உரிமையும், முந்தைய கட்சியை விட எங்களுக்கு அதிக பொறுப்பும் உள்ளது. இதற்கு காரணம், எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள், எங்களின் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களின் தயவில் தான் ஆட்சி நடக்கிறது. எனவே எதிர்கட்சி வரிசையில் மட்டுமல்ல எங்களுடைய வாக்குகள் ஆளுங்கட்சி வரிசையில் உள்ளது.

எதிரி கட்சியாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான கட்சியாக இருக்க விரும்புகிறோம். கலைஞர் மகளிர் உரிமை தொகையை போட்டதற்கு நன்றி. முதலமைச்சர் காலை உணவு திட்டம் அதனை பெரியார் நினைவு நாள் முதல் 8ஆம் வகுப்பு வரை நீடிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இதனை  நீட்டிக்கப்பட்டதற்கு நன்றி.  எங்களுடைய நான் முதல்வன் திட்டத்தை முடக்கும் முயற்சியில் இந்த அரசு இறங்கியுள்ளதாக கேள்விப்பட்டோம்.
இளைஞர் ஒவ்வொருவரும் தங்கள் துறையில் நான் முதல்வனாக திகழவேண்டும் என்பதற்காக கொண்டு வந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் மூலம்  41 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிப்பு படிக்கலாம் என்ன என வழிகாட்டியுள்ளோம்.

உயர்கல்வி முடித்தவர்கள் வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டியுள்ளோம். மேலும் நான் முதல்வன் திட்டம் சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கு பயிற்சி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிவில் சர்வீஸ் டெல்லிக்கு போக்குவரத்து கட்டணம் அரசு ஏற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 60 பேரில் யூபிஎஸ்சி வெற்றி பெற்றவர்கள் 56 மாணவர்கள்.  நான் முதல்வர் திட்டத்தில் பயன் பெற்றவர்கள். ஆல் இந்தியா 2வது இடம் பிடித்த ராஜேஸ்வரி. இப்படி பட்ட திட்டத்தை கைவிட வேண்டடிய அவசியம் என்ன.?  முதல்வர் பதிலுரையில் கூற வேண்டும்.

டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பேசியுள்ளார். பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக பேசியுள்ளார். மகளிர் சுய உதவிக்குழு சிறப்பாக செயல்படுகிறது என பேசியுள்ளார். இந்தியாவிலேயே தொழிற்சாலை பணியாளர்களில் பெண்கள் 42% தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள். பெண்கள் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது என பேசியுள்ளார். திரைப்படங்களில் தான் 4 நிமிடங்களில் பணக்காரர் ஆகிவிடுவார்கள்.  எனவே நிஜத்தில் ஒரு மாத காலத்தில் ஆட்சியில் வளர்ந்திட முடியாது. இந்த சாதனையெல்லாம் யார் ஆட்சி என மக்களுக்கு தெரியும், முதல்வருக்கும் தெரியும். திமுக ஆட்சியில் நல்லதா நடந்த ஸ்டிக்கர் ஒட்டிவிடுகிறார்கள். பேருந்தில் மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள் இலவசமாக பயணிக்க இந்த ஆட்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டதாக  பேக் நியூஸ் பரப்பப்பட்டு வருகிறது என அடுத்தடுத்து உதயநிதி கேள்வி எழுப்பினார்.

Read Entire Article