ஆப்பு கண்ணா ஆப்பு... மயோனைஸ் பிரியர்கள் தலையில் விழுந்த இடி!!!

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: உணவு பழக்கம் மாறிவிட்ட இக்காலத்தில் நோய்களும் நாங்களும் இருக்கிறோம் என்று அட்டெனென்ஸ் போட்டு ஒட்டிக் கொள்கிறது. அந்த வகையில் முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைசுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏன் தெரியுங்களா?

மாலை வேளையில் பொறித்த உணவுகளை தேடி கூட்டம் கூட்டமாக வாலிபர்கள் செல்கின்றனர். சிக்கன் 65, கிரில் சிக்கன், புதினா சிக்கன், ஸ்பைஸி சிக்கன், ஷவர்மா என்று வாலிபர்கள் விருப்பம் மாறிவிட்டது. முக்கியமாக தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை நாகை உட்பட பகுதிகளில் இதுபோன்ற உணவுகளை தேடி, தேடி வாலிபர்கள் சாப்பிடுகின்றனர். இதில் சேர்க்கப்படும் மசாலாக்களும் சைட் டிஷ்ஷாக கொடுக்கப்படும் மயோனைஸ்-ம் வாலிபர்களின் விருப்ப தேர்வாக உள்ளது.

அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ, ஷவர்மா போன்றவை இளம் தலைமுறையினரை அதிகளவு கவர்ந்துள்ளது. வறுத்த கறி, பொரித்த சிப்ஸ்கள், பிரென்ச் பிரைஸ் உள்ளிட்டவைகளுக்கு தொட்டு கொள்ள மயோனைஸ் பயன்படுத்தப்படுகிறது.  இந்த மயோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளது. ஏன் தெரியுங்களா? பின்னணியில் இருக்கு அதிர்ச்சி தகவல்... இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது:

மயோனைஸ் தெரு உணவு வகைகள் மற்றும் ஷவர்மா மற்றும் வறுக்கப்பட்ட மற்றும் தந்தூரி போன்ற அசைவ உணவுகள் போன்றவற்றில் ஒரு முக்கிய சேர்க்கையாக மாறியுள்ளது. சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம். உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் உள்பட அனைத்து உணவு நிறுவனங்களும் மூல முட்டை அடிப்படையிலான மயோனைஸின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர்கள் அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்கள்.

ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து ஓராண்டு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். உணவுப் பாதுகாப்புத் துறை மாநிலம் தழுவிய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, கடைபிடிக்க வேண்டும். மயோனைஸை சார்ந்த பொருட்களை வாங்கும் போது நுகர்வோர் எச்சரிக்கையுடன் செயல்படவும், பொருட்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைதான் தற்போது வாலிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயோனைஸ் ருசிக்கு பழக்கமாகிவிட்ட வாலிபர்களுக்கு அது கிடைக்காது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அரசு இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி எந்த வகையிலும் மயோனைஸ் மூலமாக மக்களுக்கு நோய் பரவும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்பதுதான் நிபுணர்களின் வலியுறுத்தலாக உள்ளது.

சம்சா முதல் பர்கர் வரை மயோனைஸ் தொட்டு சாப்பிட்ட வாலிபர்களுக்கு இந்த தடை அறிவிப்பு நிச்சயம் தலையில் விழுந்த இடி போல்தான் இருக்கும். முக்கியமாக தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை வேளைகளில் இந்த மயோனைஸ்சை வைத்து விற்பனையில் கொடி கட்டி பறந்த பொறித்த உணவு விற்பனையாளர்களுக்கும் இடியை இறக்கியது போல்தான் இருக்கும்.

Read Entire Article