ஆபாசமாக பேசியவர் மீது புகார் அளித்த திருச்சி எஸ்பி - நாம் தமிழர் நிர்வாகி அதிரடி கைது

1 year ago 7
ARTICLE AD

தமிழ்நாடு  முதல்வர் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து கண்ணன் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கண்ணனை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்து தில்லைநகர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தில்லைநகர் போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த கண்ணனை விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் துரை என்கிற துரைசாமியை என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் நாகராஜ் என்பவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தலைகள் சிதறும் என எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொம்பன் ஜெகன் திருச்சி சிறுகனூரில் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரத்தில்  எஸ்.பி வருண்குமார் புகைப்படத்தை வைத்து தலைகள் சிதறும் என சமூக வலைதளங்களில் பதிவிட்ட இரண்டு சிறுவர்களை பிடித்து அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் எஸ்.பி குறித்து அவதூறு பதிவிட்ட கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் அதிரடியாக கைது .

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அளித்த புகாரில் கூறியது..

நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கண்ணன் என்பவர் எனது குடும்பத்திற்கு ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன், சீமானின் தூண்டுதலிலேயே நடக்கிறது. குறிப்பாக  திட்டமிட்டு என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை ஆகும்.

காவல்துறை கண்காணிப்பாளர் என் குடும்பத்திற்கே கொலை மிரட்டல், குறிப்பாக என் தாய்க்கும், என் மனைவிக்கும் ஆபாசப் பாடல் மூலம் அவதூறு பரப்பி உள்ளார்.

என் மனைவி என்றால் சாதாரண குடும்பப் பெண் மட்டும் இல்லை , ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆவார். ஆகையால் என்னையும், என் குடும்பத்தினருக்கும், கொலை மிரட்டல் விடுத்தது மட்டும் அல்ல, ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதலங்களில்  கொச்சைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை அதிரடியாக கைது செய்து, திருச்சி சைபர் க்ரைம் காவல்நிலையத்தில் வைத்து  விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Read Entire Article