"ஆபாசநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்" - தவெகவின் காட்டமான அறிக்கை

3 weeks ago 4
ARTICLE AD

தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில் தீயசக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா உருவம் குறித்து, மிகவும் அநாகரிகமாக, நக்கலாகப் பேசி, சிரித்து, புலங்காகிதமடைந்து, தாம் எவ்வளவு கீழ்த்தரமானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

பெண்களைத் தொடர்ந்து ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையானக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்த தீயசக்தி கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜ்மோகன், அருண்ராஜ், நிர்மல் குமார், ரமேஷ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் வலியுறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article