நடிகை ராஷ்மிகா மந்தனாவைத் திருமணம் செய்துகொள்வது குறித்து விஜய் தேவரகொண்டா தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் விமர்சகர்களுக்குப் பதிலளித்துள்ளார். இந்தப் பதிவில் ராஷ்மிகா மீதான தனது காதலை வெளிப்படுத்திய விஜய் தேவரகொண்டா, இறுதியில் பயன்படுத்திய ஆபாசமான ஆங்கில வார்த்தை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் தொடங்கிய சர்ச்சை!

கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களது காதல், திருமணம் குறித்துப் பகிர்ந்துகொண்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகின. ராஷ்மிகா மந்தனா தன்னைத் திருமணம் செய்துகொள்ள நூறு முறை கேட்டதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அவரது கருத்தில் ஆணாதிக்க மனநிலை வெளிப்படுவதாகக் கூறி பெண்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா பேசியதற்கு ஆதரவாக ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்திருந்தார். விஜய் தேவரகொண்டாவின் கருத்து தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். ராஷ்மிகாவின் விளக்கத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவும் இந்த சர்ச்சைக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

ஆபாச வார்த்தையால் திட்டிய விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனாவை தனது முதுகில் சுமக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர்  “எனது சிறந்த தோழி, எனது மனைவி. என் வாழ்க்கையில் நான் மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்த அழகான விஷயங்களில் ஒன்று அவர்” என்று ராஷ்மிகா மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “கவலைப்படுபவர்கள் அனைவருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். நானும் அவளும் உலகத்திற்கு எதிராக நிற்க வேண்டியிருந்தாலும், அப்படியே இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்

விஜய் தேவரகொண்டாவின் பதிவில் அதிகம் கவனம் பெற்றது அதன் இறுதியில் இடம்பெற்ற வாசகம்தான். தன்னை விமர்சிப்பவர்களை ஆபாசமான வார்த்தையால் திட்டியிருப்பது இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மீண்டும் மீண்டும் விஜய் தேவரகொண்டா தனது ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்துவதாக அவரை மீண்டும் நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

View this post on Instagram

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)