மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியையும் இந்தியாவின் தொழில்துறையையும் டாடா குழுமம் இல்லாமல் எழுதி விட முடியாது. உப்பு முதல் சாப்ட்வேர் வரை பெரும்பாலான பிரிவுகளில் டாடா குழுமம் இயங்கி வருகிறது. இரண்டாம் தலைமுறைக்குத் தொழிலை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் இந்த சூழலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக டாடா செயல்பட்டு வருகிறது.

இண்டிகோ, டைட்டன், வோல்டாஸ், தனிஷ்க், விஸ்தாரா, தாஜ் உள்ளிட்டவை டாடாவின் முக்கியமான பிராண்ட்கள் ஆகும். இவைதவிர சந்தை மதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் டிசிஎஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பல பரந்து விரிந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.