Rolls Royce Cullinan: ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கான வங்கிக் கடன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்:

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த ஆடம்பர காரை பயன்படுத்துவதை, பணம் படைத்தவர்கள் கவுரவமாக கருதுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் சார்பில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நான்கு கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த பிராண்டின் புதிய தலைமுறை மாடலை வாகன உற்பத்தியாளர்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். இந்த சொகுசு காரின் விலை ரூ.10.50 கோடியில் தொடங்கி ரூ.12.25 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விலை உயர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் இதுதான்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் அட்வான்ஸ் தொகை:

Rolls-Royal Cullinan Series II இன் பெட்ரோல் வேரியண்ட் பற்றி பேசுகையில், இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.12.06 கோடி ஆகும். ஆனால் இந்த காரை வாங்க முழுப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒருவர் இந்த காரை வாங்க விரும்பினால், அட்வான்ஸ் தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதியை வங்கிக் கடன் வாயிலாகவும் பெறலாம். இதற்காக நீங்கள் செலுத்த வேண்டிய அட்வான்ஸ் குறைவாக இருக்கும் என்று மட்டும் கருதிவிட வேண்டாம். ஏனென்றால், Rolls-Royal Cullinan Series II இன் பெட்ரோல் வேரியண்டை வாங்க, நீங்கள் அட்வான்ஸ் ஆக மட்டுமே ரூ.1.20 கோடி செலுத்த வேண்டும்.

வங்கி கடன் விவரம்:

அட்வான்ஸ் செலுத்தி ரோல்ஸ் ராய்ஸின் இந்த சொகுசு காரை வாங்குவதற்கு முன், எவ்வளவு காலத்திற்குள் கடனை திருப்பி செலுத்த முடியும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தவணையை செலுத்த முடியும் என்பதை உணர்ந்து, இந்த கடனுக்கான கால அவகாசத்தை நீங்கள் தீர்மானிக்கலாம். ரோல்ஸ்ராய்ஸ் கல்லினனின் புதிய தலைமுறை மாடலை வாங்க முழு பணமும் கையில் இல்லாதவர்கள், நீங்கள் செலுத்தும் ரூ.1.2 கோடி முன்பணம் போக மீதம் ரூ.10.85 கோடியை கடனாக வாங்க வேண்டும். இந்தக் கடனுக்கு வங்கி வசூலிக்கும் வட்டியின்படி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.

மாதாந்திர தவணை முறை:

நீங்கள் 9 சதவிகித வட்டியில் 5 ஆண்டுகளுக்கு கடன் வாங்குகிறீர்கள் என்று கருதினால், பிறகு ஒவ்வொரு மாதமும் வங்கியில் ரூ.22.54 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்.

ஏழு ஆண்டுகளுக்கு இந்தக் கடனைப் பெற்றால், 9 சதவிகித வட்டியில், ஒவ்வொரு மாதமும் ரூ.17.46 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

ஐந்தாண்டுகளுக்கு கடன் வாங்கினால், இந்த ஐந்து ஆண்டுகளில் கார் தொகையுடன் சேர்த்து ரூ.2.66 கோடியை வங்கியில் செலுத்த வேண்டும்.

அதேசமயம் நீங்கள் 7 ஆண்டுகளுக்கு இந்தக் கடனைப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் கூடுதலாக ரூ.3.82 கோடியை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.