விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதிதாக ஒரு கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக உள்ளதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உயர்நிலைக் குழு ஆலோசித்து முடிவு செய்யும். இது பற்றி கட்சி தலைமையின் கவனத்திற்கும் கொண்டு வந்திருகின்றனர். இது குறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி உள்ளோம். இது தொடர்பான முடிவு விரைவில் வெளிவரும். விசிகவில் யார் தவறு செய்தாலும், முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.