"ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை" தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

4 days ago 2
ARTICLE AD

திருச்சி: தமிழக முதலமைச்சர் விஜய், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி செலுத்தும் பிரம்மாண்ட ‘மக்கள் சந்திப்பு’ மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு இன்று மாலை திருச்சியில் நடைபெறுகிறது. இதையொட்டிப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள வேளையில், நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றி வரும் அவல நிலை அரங்கேறியுள்ளது.

நடைபெற்று முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி, இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தற்போது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தன்னை முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி செலுத்த முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி வருகிறார். திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் (St. Joseph's College) தனியார் கல்லூரி மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வும், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமும் மாலை நடைபெறுகிறது.

இதற்காகச் செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அமர்வதற்காகப் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலின் முகப்புப் பகுதியில், முதலமைச்சர் விஜய் தனது பிரத்யேக வாகனத்தில் இருந்தபடியே மக்கள் மத்தியில் பேசும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வு என்பதால், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தூய ஜோசப் கல்லூரி முழுவதும் போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த தனியார் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரிந்த ஏராளமான தெருநாய்களைத் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தினர் கூண்டு வைத்துப் பிடித்துச் சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர், முதலமைச்சர் விஜய் தனது பிரத்யேக வாகனத்தின் மூலம் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த செயின்ட் ஜோசப் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார்.

ஒருபுறம் முதலமைச்சரின் வருகைக்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளும், பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் அங்குப் பணியாற்றும் விளிம்புநிலை மனிதர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ள அந்த தனியார் கல்லூரி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்குக் கையுறை (Gloves) உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்புக் கருவிகளும் வழங்கப்படவில்லை. கைகளில் முறையான பாதுகாப்பு உறைகள் இல்லாமல், அவர்கள் ஆபத்தான முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் அவல நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

"மக்களுக்கான அரசு" என்று பேசப்படும் சூழலில், முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழா மேடையின் பின்னணியிலேயே உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பற்ற இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article