ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கும் நியமன ஆணைகள்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!

5 months ago 4
ARTICLE AD

தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, திருப்பூர், ராணிப்பேட்டை,  திருவாரூர்,  உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர். இதேபோல் ராமநாதபுரம், நீலகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த கலாந்தாய்வை பொறுத்தவரை எமிஸ் தளம் வழியாக வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் கடந்த ஜூலை 2 ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூலை 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளின்படி, பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்​ளி​களில் 2,342 இடைநிலை ஆசிரியர்​கள் பணிநியமனத்​துக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கையில் கூறியுள்ளதாவது:" தமிழ்நாட்டில் அரசுப் பள்​ளி​களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணி​யிடங்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் நடத்​தப்​பட்ட போட்​டித் தேர்​வில் தகுதி பெற்று மதிப்​பெண்​கள் மற்​றும் இனச்​சுழற்சி அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​பட்ட 2,342 பேர் கொண்ட தேர்​வுப் பட்​டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவர்​களுக்​கான நேரடி பணி நியமன கலந்​தாய்வு சென்​னை​யில் நடத்​தப்​பட்டு ஆணை வழங்​கப்​பட​வுள்​ளது. அத்​துடன் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களின் வீட்டு முகவரி​யுடன்​கூடிய பெயர்ப் பட்​டியல் அனைத்து மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்டிருக்கிறது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணி​யிடத்​துக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்​துப்​பட்டு எம்​சிசி பள்​ளி, கீழ்ப்​பாக்​கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்​ரி​குலேஷன் பள்ளி ஆகிய இரு பள்​ளி​களில் நேரடி முறை​யில் இட ஒதுக்​கீட்​டுக்​கான கலந்​தாய்வு நடை​பெறவுள்​ளது.' முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்

ஆகவே ஆசிரியர் பணி​யிடங்​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​கள் முன்​னுரிமைப் பட்​டியல் வரிசைப்​படி கலந்​தாய்வு நடை​பெறும் நேரத்​துக்கு முன்​பாகவே மையத்​துக்கு வரு​கை புரிய வேண்​டும். தாமத​மாக வருபவருக்கு அந்த நேரத்​தில் உள்ள காலிப்​பணி​யிடங்​களுக்கு மட்​டுமே தேர்​வுசெய்து கொள்ள அனு​ம​திக்​கப்​படும். இதையடுத்து, பணிநியமனம் பெறு​பவருக்கு முதல்​வர் ஸ்​டா​லின் நியமன ஆணை​களை வழங்​கு​வார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளை​யாட்டு அரங்​கில் ஜூலை 23-ம் தேதி நடை​பெறும்" இவ்​வாறு தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

Read Entire Article