புக‌ழ்பெ‌ற்ற ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஏழு லட்சம் மதிப்பிலான காணிக்கையாக வழங்கிய 7 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை வழங்கினார்

பெருமாளுக்கு தங்க கிரீடம்

காஞ்சிபுரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சொர்க்கவாசல் இருக்கும் ஒரே கோவிலான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாளுக்கு, காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர்களான B.M. மிதுலன், பழனி , கோவிந்தராஜ், நாராயணன் ஆகியோர் தங்க கிரீடம் சாற்ற விரும்பினர். அதன்படி ரூ.7 லட்சம் மதிப்புள்ள சுமார் 6.400 கிலோ எடை கொண்ட தங்க கிரீடம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பிரபல B.M. மிதுலன் நகைக்கடையில் தயாரிக்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

காணிக்கையாக காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலுக்கு வழங்கினர். இந்த தங்க கிரீடத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் இடம் வழங்கி சன்னதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலுக்கு வந்து அஷ்டபுஜ பெருமாளுக்கு சாற்றினார். பிறகு கற்பூர, தீபாராதனை காட்டப்பட்டது.

புரட்டாசி சனிக்கிழமை ஓட்டியும், முதல் முறையாக பெருமாளுக்கு தங்க கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். முக்கிய திருவிழாக்களின் போது அஷ்டபூஜ பெருமாள், தங்க கிரீடத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம்

கோயில் நகரமாக போற்றக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்த போது இருந்து வருகிறது. இந்த கோயில் 44 வது திவ்ய தேசமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேச தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் எட்டு கரங்களுடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.

ஒருமுறை சரஸ்வதி தேவிக்கு, லட்சுமி தேவி பெரியவரா, தான் பெரியவரா என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி பிரம்மாவின் மனைவி சரஸ் தனது கணவர் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கு பிரம்மா லட்சுமி உயர்ந்தவர் என தெரிவித்ததால் பிரம்மாவின் மனைவி கோபம் அடைகிறாள். இதனைத் தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் சரஸ்வதி முறையிட்டபோது, அவர்களும் லட்சுமி பெரியவள் என கூறியதால் ஆத்திரமடைந்து சரஸ்வதி பிரம்மாவை பிரிந்து செல்கிறார்.

இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் பிரம்மா அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அஸ்வமேத யாகம் செய்யும்போது எப்போதும் மனைவியுடன் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்த போது அதை மீறி, பிரம்மா செயல்பட்டதால் மீண்டும் கடும் கோபம் அடைந்த சரஸ்வதி யாகத்தை தடுக்க பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டார். அதன்படி வேகவதி நதியாக வந்து தியாகத்தை தடுக்க முயற்சி செய்தபோது பெருமாள் அதிலிருந்து யாகத்தை காத்தருளினார். தொடர்ந்து யாகத்தை கெடுக்க பூதத்தை சரஸ்வதி ஏறிவிட்டார். கூட்டத்தை அழிப்பதற்காக திருமால் 8 கரங்களுடன் அவதாரம் எடுத்து பூதத்தை அளித்தார், என்பது இந்த கோயிலில் தல வரலாறு உள்ளது.

யானையை காப்பாற்றிய பெருமாள்

ஒரு முறை கஜேந்திரன் என்ற யானை திருமாலிடம் மிகுந்த பக்தியாக இருந்து வந்தது. தினமும் ஒரே குளத்தில் இருந்து தாமரை பூவை எடுத்து வந்து பெருமாளுக்கு பூஜை செய்வதை யானை வழக்கமாக கொண்டு வந்தது. அப்போது ஒரு நாள் சென்ற போது குலத்தில் இருந்த முதலை யானையை தாக்கி, யானையின் கால்களை இருக்க பற்றி கொண்டது.

என்னதான் யானை பலமாக இருந்தாலும் தண்ணீரில் முதலை பலம் என்பதால் யானையால் வெளிவர முடியாமல் இருந்தது. உடனடியாக யானை பெருமாளை நோக்கி காப்பாற்றுங்கள் என யானை முறையிட்டது. உடனடியாக திருமால் 8 கரங்களுடன் கருடன் மீது வந்து யானையை காப்பாற்றினார் என்பது ஐதிகமாக உள்ளது. அதே திருக்கோளத்தில் இந்த கோயிலில் திருமால் காட்சி அளிக்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.