அவையை நடத்துவது அமித் ஷாவா? கார்கே காரசார கேள்வி... மாநிலங்களவையில் கடுமையான விவாதம்

4 months ago 5
ARTICLE AD

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவையை நடத்துவது அமித் ஷாவா அல்லது நீங்களா என அவை துணைத்தலைவரிடம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவையை நடத்துவது யார்?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை எடுத்து வைத்தார். தனது உரையில் அவையை நடத்தும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிடம் அவையை நடத்துவது நீங்களா அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷாவா என்று கார்கே கேட்டுள்ளார்.

கார்கே சாடல்:

எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் CISF பணியாளர்கள் நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். அவையின் மையப்பகுதியில் CISF பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக ஆட்சேபிப்பதாக கார்கே கூறினார். இதன் பின்னர், அவருக்கும் தலைவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவையை நடத்துவது குறித்து கார்கே ஒரு கேள்வியை எழுப்பினார். அவரது கருத்துக்குப் பிறகு, ஆளும் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்வினை எழுந்தது, துணைத் தலைவரும் பதிலளித்தார். இந்தக் குற்றச்சாட்டைத் தவறு என்று கூறி அவர் தெளிவுபடுத்தினார்.

பொது நலனுக்காக பேசினோம்:

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பொது நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்புவதைத் தடுக்கிறார்கள் என்று கார்கே குற்றம் சாட்டினார். நீங்கள் சி.ஐ.எஸ்.எஃப்-ஐ உள்ளே கொண்டு வருகிறீர்கள்ங்கள் நாடாளுமன்ற ஊழியர்கள் இங்கே திறமையானவர்கள், ஆனால் நீங்கள் காவல்துறையையும் இராணுவத்தையும் கொண்டு வந்து அவையை நடத்த விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

கிரண் ரிஜ்ஜூ மறுப்பு:

கார்கேவின் இந்த குற்றச்சாட்டுகளை அமைச்சர்  கிரண் ரிஜிஜு மறுத்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, "எதிர்க்கட்சித் தலைவர் அவையில் ராணுவம் மற்றும் காவல்துறை பற்றிப் பேசினார், ஆனால் அது உண்மையல்ல. அவையில் மார்ஷல்கள் மட்டுமே உள்ளனர், மார்ஷல்கள் மட்டுமே அவைக்கு வந்தனர்" என்றார். இதுபோன்ற தவறான உண்மைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  துணைத் தலைவரிடம் கேட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பீகாரில் நடைபெற்று வரும் வாக்களார்கள் பெயர் நீக்கம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிறப்பு தீவிர ஆய்வு ( SIR) ஆகியவை பிரச்சினைகளாக மாற்றப்பட்டன அவையானது அமளிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றமானது நடந்து வருகிறது.

Read Entire Article