தமிழ் திரையுலகின் பிரபல இ்யக்குனராக உலா வந்தவர் எஸ்.பி.முத்துராமன். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் எஸ்பி முத்துராமன். இவர் 1988ம் ஆண்டு நல்லவன் என்ற படத்தை இயக்கினார்.

நல்லவன்:

விஜயகாந்த், ராதிகா, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்த இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியவர் கலைப்புலி எஸ்.தாணு. இந்த படத்தின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை தயாரிப்பாளர் தாணு பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, நானே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதின படம் நல்லவன். அந்த படத்தில் கதாநாயகி ராதிகா. படத்தில் அவங்க கலெக்டர். கலெக்டருக்கு மணவறையில தாலி கட்ட வேண்டிய சூழ்நிலையில வரும்போது, நான் 18 ஆயிரம் ரூபாய்க்கு நல்லி சில்க்ஸ்-ல இருந்து பட்டுப்புடவை வாங்கி கொடுத்துட்டேன்.

அவரு கடவுள்:

எஸ்பி முத்துராமனை சொல்லனும். அவரு கடவுள். அவரு புடவை பாத்துட்டு பில்ல பாத்துட்டு 18 ஆயிரம் யார்? யார்? வாங்குனதுனு கேட்டாரு. புரொடியூசர் தான் வாங்குனாருனு சொல்லவும் கூப்பிடு அவரைனு கூப்பிட்டாங்க. தாணு சார் என்ன 18 ஆயிரத்துக்கு புடவை வாங்கிருக்கீங்க? கலெக்டர் பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு.

பணக்கார வீட்டுப் பொண்ணு உங்க கதையில. நீங்க படத்துல பண்ணும்போது போப்பா 400 ரூபாய்க்கு புடவை வாங்கிட்டு வாப்பா. 400 ரூபாய்க்க புடவை எடுத்துட்டு வந்து அந்த ஷாட்டை காமிக்கும்போது தாணு சார் உங்க 18 ஆயிரம் புடவை எப்படி இருக்குதுனு கேட்டாரு. சோ ஒரு புரொடியூசரை எவ்வளவு மிச்சம் பண்றாரு பாருங்க. அதனால்தான் அவருக்கு மனிதரில் புனிதர்னு பட்டம் கொடுத்தேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் சினிமாவின் ஜாம்பவன்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோர் மட்டுமின்றி பழம்பெரும் நடிகர்களான எஸ்.பி.முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரையும் கார்த்தி, பிரபு, ரகுவரன் , ராம்கி ஆகியோரையும் நாயகனாக இயக்கியுள்ளார். ஏவிஎம் நிறுவனத்திற்காக ஏராளமான வெற்றிப்படங்களை ரஜினி மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள எஸ்பி முத்துராமன் தற்போது அந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

ரஜினிகாந்தின் ஆறில் இருந்து அறுபது வரை, போக்கிரி ராஜா, நான் மகான் அல்ல, அடுத்த வாரிசு, பாயும்புலி, மிஸ்டர் பாரத், வேலைக்காரன், பாண்டியன் ஆகிய படங்களையும், கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.