<p>அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மார்பில் குத்தியதால் மாடு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>
<p>மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நவீன் குமார் என்ற வீரர் கலந்து கொண்டார். 9வது சுற்றில் களத்தில் இறங்கிய இவரை, ஜல்லிக்கட்டு காளை குத்தியது. களத்திலேயே சரிந்து விழுந்த நவீன் முதலுதவி சிகிச்சை அனுமதிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் பலியானார். இது அவரது பெற்றோர்களை சோகத்தில் ஆழ்த்தியது.</p>
<p> </p>