அவசரமாக பணம் தேவை !! காதலனுக்காக தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்த மகள் !! நடந்தது என்ன ?

1 month ago 5
ARTICLE AD

அவசரமாக பணம் தேவை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பிள்ளையார்புரம் அன்னம் வலை கம்பெனி தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் என்பவரது மனைவி கலாவதி ( வயது 42 ) இவர் அதே பகுதியில் சிறிய அளவில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் தனியார் மருத்துவ கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். மேலும் இரண்டாவது மகளான 19 வயதுடைய சுருதி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அப்போது சுருதிக்கும் அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் திங்கள் சந்தை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அபிலாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் அபிலாஷ் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக காதலி சுருதியிடம் பணம் கேட்ட போது அவர் வீட்டில் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த 10 பவுன் நகையை யாருக்கும் தெரியாமல் அபிலாஷிடம் கொடுத்திருக்கிறார்.

வீட்டிலிருந்த 10 பவுன் நகைகள் மாயம்

கலாவதி மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளில் 10 பவுன் நகைகள் திடீரென மாயமானது அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். எனவே இது குறித்து வீட்டில் இருந்த தனது இரண்டு மகள்களிடமும் விசாரித்த போது இரண்டாவது மகள் சுருதியிடம் தனது காதலன் அபிலாஷ் அவசர தேவைக்கு பணம் கேட்டதால் நகையை கொடுத்ததாக தெரிவித்தார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த தாயார் கலாவதி நகைகளை கேட்டு மகளிடம் தகராறு செய்து வந்தார். இதனால் தாய் மகளுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு நாள் சுருதியின் வீட்டுக்கு அவரது காதலன் அபிலாஷ் வந்துள்ளார்.

துப்பட்டாவால் கழுத்தை நெறித்த மகள்

சுருதியின் தாய் கலாவதி அபிலாஷிடம் நகை குறித்து கேட்டிருக்கிறார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த அபிலாஷ் உருட்டு கட்டையால் கலாவதியின் பின் தலையில் தாக்கியுள்ளார். மேலும் இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த தாயார் கலாவதியை அபிலாஷ் மற்றும் மகள் சுருதி ஆகியோர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த சமயத்தில் கலாவதியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாக்குதலுக்கு உள்ளான அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் தாயார் கலாவதி புகார் அளிக்கவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார் சுருதி மற்றும் அபிலாஷை கைது செய்தனர். பின்னர் இருவரையும் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read Entire Article