அவங்க காமராஜர் பேத்தியே இல்ல.. தவெகவில் இணைந்த மயூரி கண்ணன் யார்? - வெடித்த சர்ச்சை!

3 months ago 8
ARTICLE AD

பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளி பேத்தியாக அறியப்படும் மயூரி கண்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில் அவரது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என காமராஜரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தில் மயூரி கண்ணன்

தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த மறைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தியாக மயூரி கண்ணன் மற்றும் கமலிகா ஆகிய இருவரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இணைந்து பணியாற்றி வந்தனர். இப்படியான நிலையில் மயூரி கண்ணன் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் காமராஜரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மயூரி கண்ணன் தன்னை காமராஜரின் வம்சாவளி பேத்தி என கூறக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சகோதரி பேரன் கடும் எதிர்ப்பு

இந்த நிலையில் காமராஜரின் உடன் பிறந்த சகோதரியான நாகம்மாளின் பேரனான 62 வயதாகும் காமராஜ் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இவர் தற்போது விருதுநகரில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “காமராஜருக்கு எந்தவிதமான வகையிலும் மயூரி கண்ணன் ரத்த சொந்தமில்லாதவர். நேரடி வாரிசு அல்லாத அந்த பெண் எப்படி தன்னை பேத்தி என உரிமை கொண்டாட முடியும் எனவும் காமராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயூரி கண்ணன் எந்த கட்சியில் வேண்டுமானாலும் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றலாம். ஆனால் காமராஜர் பெயரை தேவையில்லாமல் பயன்படுத்துவது மனதிற்கு சங்கடமாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மயூரி என்பவர் யார்?

காமராஜரின் வம்சாவளி பேத்தி என சொல்லப்படும் மயூரி கண்ணன் யார் என்பதையும் பேரன் காமராஜ் தெளிவுப்படுத்தியுள்ளார். அதாவது மறைந்த தலைவர் காமராஜரின் தந்தையான குமாரசாமியை அவரின் சிறு வயதில் வாரிசு இல்லாத ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்த்து வந்தது. அவரை தத்துப் பிள்ளையாக வளர்த்து வந்தவரின் சகோதரர் தான் அண்ணாமலை அவருக்கு சந்திரா என்ற மகள் இருந்தார். அந்த சந்திராவுக்குப் பிறந்த இரண்டு மகள்களில் இருவர் மயூரி, கமலிகா ஆகியோர் ஆவர்.

எனவே இனிவரும் காலங்களில் அவர்கள் இருவரும் காமராஜர் பெயரை பயன்படுத்தி எதிலும் ஈடுபட வேண்டாம் எனவும் இதன்மூலம் தான் கேட்டுக்கொள்வதாக அசல் பேரன் காமராஜ் கூறியுள்ளார். குமாரசாமியின் வளர்ப்பு தாய் பார்வதி, காமராஜர் சிறையில் இருந்தபோது உயிரிழந்து விட்டார். அதன்பிறகு அந்த குடும்பத்துடன் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. காமராஜரின் தங்கையான நாகம்மாளுக்கு 4 குழந்தைகள். அவர்கள் யாருமே எந்த கட்சியிலும் இல்லை. காமராஜர் கூட கடைசியில் தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியில் இல்லை” எனவும் பேரன் காமராஜ் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read Entire Article