அல்லல்போக்கும் தஞ்சாவூர் மூலை அனுமார் கோயில்: வைகாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

6 months ago 8
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலில் வைகாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் பலர் செய்துள்ளனர்.

தஞ்சையின் பெருமையை மேலும் உயர்த்தும் கோயிலாக மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது என்றால் மிகையில்லை. இதை மூலை அனுமார் கோயில் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. இக்கோயிலை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் கட்டினார். இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் கொடிமரத்துடன் கூடிய அனுமனுக்கான தனி பெரும் கோயிலாக இது உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். இக்கோயிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் ஸ்தலம். சத்குரு தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோயிலை வலம் வரவேண்டும். இதனால் குறைகள் விலகி நலம் பயக்கும்.

இக்கோயிலில் சீதையுடன் பட்டாபிஷேக ராமர், ருக்மணி, பாமா சமேதராக கிருஷ்ண பகவான், இலட்சுமி நரசிம்மர், சங்கரநாராயணர், ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் கற்சிற்பம் ஆகியவை உள்ளன. பத்து தலை ராவணன் சிலையும், வாலை சுருட்டி ஆஞ்சநேயர் அமர்ந்துள்ள சிற்பமும் இங்குள்ளன. இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

தஞ்சாவூரில் வாயு மூலையில் அமைந்த ஒரே அனுமன் கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. பக்தர்கள் தொடர்ந்து 18 அமாவாசைகள் 18 தீபமேற்றி 18 வலம் வந்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் இருந்து (திங்கட்கிழமை) வைகாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு இலட்ச ராம நாமம் ஜெபமும் தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு நவக்கிரக தோஷங்கள் போக்கும் மூலை அனுமாருக்கு நவதானியங்களாலான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து மூலவருக்கு எலுமிச்சை பழங்களான மாலை சாத்தி தீபாராதனை நடக்கிறது. இத்தலத்தில் பக்தர்கள் மூலை அனுமார் பாதத்தில் நவதானியங்கள் வைத்து பூஜித்து பின்னர் பிரசாதமாக நவதானியங்களை பெற்று அவரவர் இல்லங்களில் நவதானியங்களை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் பசுவிற்கு கொடுத்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

வைகாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ் மற்றும் ரவி கண்காணிப்பாளர் மற்றும் அமாவாசை கைங்கர்யம் தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.

Read Entire Article