இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டோ. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இவர்களின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று ஃபார்ச்சுனர்.

2026 Toyota Fortuner Leader:

இந்த காரின் புதிய வேரியண்டான 2026 Toyota Fortuner Leader Edition காரை டொயோட்டோ நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 36.51 லட்சம் ஆகும். இந்த கார் 4×2 MT மற்றும் 4×2 AT வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. மேனுவல் வேரியண்ட் மேற்கண்ட விலையிலும், ஆட்டோமெட்டிக் வேரியண்ட் ரூபாய் 38.72 லட்சத்திற்கும் உள்ளது.

இந்த புதிய வேரியண்ட் மோல்டிங், கிளாஸ் ப்ளாக் அலாய் சக்கரங்கள், ஹப் கேப்ஸ், கருப்பு மேற்கூரை, கருப்பு ஆண்டனா வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. சூப்பர் ஒயிட், ப்ளாட்டினம் ஒயிட் பியர்ல், ஆட்டிடியூட் ப்ளாக் வண்ணங்களில் உள்ளது.

சிறப்புகள்:

கருப்பு மற்றும் அரக்கு வண்ணங்களில் இருக்கைகள் உள்ளே பொருத்தப்பட்டுள்ளது. டயர் ப்ரசரிங் மானிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ஃப்ரன்ட் பாக் விளக்குகள் உள்ளது. ஆட்டோமெட்டிக்கல்லி ஃபோல்டிங் ஓஆர்விஎம், பவர் டெயில்கேட், எல்இடி ரியர் காம்பினேஷன் விளக்குகள் வசதி உள்ளது.

ரியர் முகப்பு விளக்குகள், வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் பவர் அட்ஜஸ்ட்மென்ட் வசதி உள்ளது. டூயல் ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் வசதி உள்ளது. ஆட்டோ டிம்மிங் IRVM, 8 இன்ச் தொடுதிரை ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வித் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்ட் ஆட்டோ வசதி உள்ளது.

பாதுகாப்பு வசதிகள்:

இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக 7 ஏர்பேக்குகள் வசதி உள்ளது. வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வித் ப்ரேக் அசிஸ்ட் உள்ளது. ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் கேமரா, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது.

2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் 48 வோல்ட் மில்ட் ஹைப்ரிட் சிஸ்டம் வசதி உள்ளது. இந்த காரில் 150 கிலோவாட் 201 எச்பி மற்றும் 420 என்எம் டார்க் இழுதிறன் வசதி கொண்டது. 6 கியர் மேனுவல் வேரியண்டும் உள்ளது. 6 கியர் ஆட்டோமெட்டிக் வேரியண்டும் வசதியும் உள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியண்டும் 150 கிலோவாட்டும், 500 என்எம் டார்க் இழுதிறன் வசதியும் உள்ளது.

புதியதாக அறிமுகமாகியுள்ள 2026 Toyota Fortuner Leader Edition கார் 7 இருக்கைகள் உள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.