சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் பாலாஜி தாக்குதலை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.