கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , சிம்பு , அசோக் செல்வன் , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்பகுதியாக தி ஹாலிவுட் ரிப்போர்டர் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளார் கமல். இதில் தனது சினிமா வாழ்க்கைப் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது தனது அம்மாவை அவமானப்படுத்த சலூன் கடையில் வேலைக்கு சேர்ந்தது பற்றி அவர் கூறியுள்ளார்

அம்மாவை பழிவாங்க சலூன் கடையில் வேலை செய்தேன் - கமல்

" பாலச்சந்தருக்கு முன் எனக்கு இன்னொரு குரு இருந்தார். எனக்கு சவரம் செய்ய கற்றுக் கொடுத்தவர். என் அம்மா என்மீது ரொம்ப அவ நம்பிக்கை கொண்டிருந்தார். புத்தகம் படிப்பது , படம் பார்ப்பது என நான் இருந்தது அவருக்கு பிடிக்கவில்லை. இப்படியே இருக்கக் கூடாது ஏதாவது வேலை செய்தே ஆக வேண்டும் என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். என்னுடைய திறமைக்கு ஏற்ற வேலையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் என் அம்மா மீது இருந்த கோபத்தில் அவரை அவமானப்படுத்த முடிவு செய்தேன். பின் சலூன் கடையில் சென்று வேலைக்கு சேர்ந்தேன். அதை தான் பாலசந்தர் தனது படத்தில் வைத்தார். எனக்கு முடி திருத்த சொல்லிக் கொடுத்தவர் தான் பாலச்சந்தர் எனக்கு பொருத்தமான குருவாக இருப்பார் என்று சொன்னார். என்னை அவரும் அவரை நானும் அப்படிதான் கண்டுகொண்டோம். அவரையே அறியாமல் என்னை அவர் செதுக்கியிருக்கிறார். ஒருவருக்கு ஒன்று கிடக்க வேண்டும் என்று இருந்தால் அதில் அதிர்ஷ்டத்திற்கு வேலையில்லை. இன்று உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கூகுளில் கேட்டு தெரிந்துகொள்ளலாம் . பாலச்சந்தர் தான் என்னுடைய கூகுள் . எந்த சந்தேகம் கேட்டாலும் அதை விளக்குவதற்கு அவர் தயாராக இருந்தார். அவருக்கு அதைப் பற்றி தெரிந்தும் இருந்தது. அப்படி ஒருவரால் இருக்க முடியாது. என்னுடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும் என்பது அவர் எனக்கு கற்றுக் கொடுத்ததில் மிக முக்கியமான ஒன்று." என கமல் பேசியுள்ளார்.