தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. தேனி அம்மாவின் (ஜெயலலிதா) கோட்டை என்பதை நிரூபிப்போம் - பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடக்கிறது. அன்று எந்த கூட்டணி வெற்றி பெறப்போகிறது என்று தமிழ்நாடு உள்பட பிற மாநில மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பல பெரிய கட்சிகள் கடுமையாக பிரச்சாரம் செய்து வருகின்றது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் கதிர்காமுவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட லட்சுமிபுரம் பெரியகுளம், வடுகபட்டி சில்வார்பட்டி, கெங்குவார் பட்டி, ஜெயமங்கலம் குள்ளபுரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் மேற்கொண்டார். இதில் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசியபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்கள் மற்றும் மாணவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, அம்மாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வர அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எடப்பாடியார் தலைமையில் பாஜக, பாமக, தமாகா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து தேனி மாவட்டம் அம்மாவின் கோட்டை என நிரூபிக்கும் விதமாக பெரியகுளம் தொகுதியில் குக்கர் சின்னத்திற்கும், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் ஆகிய தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கும் வாக்களித்து மாபெரும் வெற்றி தேடித்தர வேண்டும் வேண்டுகோள் விடுத்தார். திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், மீண்டும் அமைதியான தமிழகத்தை உருவாக்கவும் பொதுமக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். பிரச்சாரம் மேற்கொண்டார்.