சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சீரியலாக இருப்பது எதிர்நீச்சல். இந்த சீரியலின் நாயகி கதாபாத்திரமான ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிப்பர் ஈஸ்வரி. இவர் முதன்முதலில் தமிழில் பைவ் ஸ்டார் படத்தி்ல கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் இவர் நடித்துள்ளார்.

அப்படி நடிக்கச் சொல்வது நியாயம் இல்லை:

இவர் தமிழில் அஜித்குமார் நடித்த வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்திருப்பார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர் கூறியிருப்பதாவது, வரலாறு படத்தில் அஜித்திற்கு அம்மாவாகவும் நடித்தேன். ஜோடியாகவும் நடித்தேன். விருப்பப்பட்டு பண்ணேன். அதன்பிறகு சம்பந்தமே இல்லாமல் அதே மாதிரி ரோல் வந்தது. அபத்தமாக இருக்கிறது. அம்மா கதாபாத்திரம் செய்வதற்கு நான் எதிரானவள் இல்லை.

அம்மா ரோல் என்பது ஒரு கதாபாத்திரம். பண்ணமாட்டேனு சாெல்ல. அதற்கு நான் நியாயப்படுத்தனும். என்னைவிட இரண்டு மடங்கு வயசு அதிகம் உள்ளவருக்கு அம்மாவாக நடிங்கனு சொன்னாங்க. அது எனக்கு நியாயமா தெரியல. இப்பவும் அப்படித்தான் தோணுது.

இவ்வாறு அவர் பேசினார்.

மலையாளத்தில் முன்னணி கதாநாயகி:

யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் முன்பு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. கனிகாவிற்கு பைவ் ஸ்டார் படத்திற்கு பிறகு தமிழில் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. பின்னர், தமிழில் தனது 3வது படத்திலே அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். பின்னர், ஏராளமான மலையாள படங்களில் நடித்தார். மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக தமிழில் நிறம் மாறும் உலகில் என்ற படத்தில் நடித்துள்ளார்.

எதிர்நீச்சல் நாயகி:

இவர் வெள்ளித்திரை நடிகையாக அடைந்த பிரபலத்தை காட்டிலும் சின்னத்திரை மூலமாக மிகவும் பிரபலமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக அவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். இவர் சீரியலில் நடித்து வந்தாலும் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.