விழுப்புரம்: திருவெண்ணெய் நல்லூரில் கஞ்சா கடத்திய தாய், மகன் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்து 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

80 கிலோ கஞ்சா பறிமுதல்; ஏழு பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகேயுள்ள ஏனாதிமங்கலம் பகுதியில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அபே ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சா கடத்திய செங்கல்பட்டு மாவட்டம் மேல் கலவாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகனுமான கணேசன் தனம் ஆகிய இருவரை கைது செய்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்தபோது திருவெண்னைய் நல்லூர், செஞ்சி, சென்னையை சார்ந்த தமிழ் குணசேகரன், தினேஷ் கார்த்தி சீனிவாசன் ஆகியோரிடம் கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மொத்தமாக ஏழு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 80 கிலோ கஞ்சா , செல்போன்கள் ஆட்டோவை பறிமுதல் செய்து ஏழு பேரையும் சிறையிலடைத்தனர்.

மதுபாட்டில் விற்ற, 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர். வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் காசி,48; என்பவர் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுபாட்டில்கள் மற்றும் 200 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல மற்றொரு பகுதியில் மதுபாட்டில் விற்ற அய்யாக்கண்ணு மகன் காந்தி (45 ) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்த, 15 மதுபாட்டில்கள் மற்றும் 200 ரூபாய் கைப்பற்றப்பட்டது.