தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தவெகவும் போட்டியில் குதித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தார். இதனையடுத்து மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல திட்டமிட்ட நிலையில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் 2 மாதங்கள் கட்சி எங்கிருக்கிறது என தெரியாத வகையில் அமைதி நிலைக்கு சென்றது.

இதனையடுத்து ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்சார் போர்டால் படத்தை வெளியிட முடியாத சிக்கலில் தவித்து வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அடுத்தடுத்து வழக்குகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விசாரணையில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடைசியாக தவெக தலைவர் விஜய்யையும் இரண்டு நாட்களாக சிபிஐ விசாரணை நடத்தியது. எனவே ஜனநாயகன் திரைப்படம், சிபிஐ விசாரணை தொடர்பாக எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த விஜய், தற்போது களத்தில் இறங்கவுள்ளார்

இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.