என் மீது அவதூறுகளை வீசுகின்றனர் - அமைச்சர் மூர்த்தியை நிரூபிக்க சொல்லுங்கள் - சவால் விட்ட அதிமுக வேட்பாளர்!

அதிமுக வேட்பாளர் செய்தியாளர் சந்திப்பு

மதுரை கிழக்கு சட்ட மன்ற தேர்தலில் அமைச்சர் மூர்த்திக்கு போட்டியாக அதிமுக வேட்பாளர் மாங்குளம் மகேந்திரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியின் குடியிருப்பு பகுதி அருகே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்...," கிழக்குத் தொகுதியில் வரவேற்பு சிறப்பாக உள்ளது. பெண்கள் ஆர்வத்துடன் வரவேற்க வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை, கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால், நிச்சயம் உங்கள் இரட்டை இலைக்கு தான் வாக்களிப்போம் என்று சொல்கின்றனர்.

நல்ல மாற்றம் தெரிகிறது.

10 மணி வரைக்கும் காத்திருந்து வரவேற்பு கொடுக்கின்றனர். நல்ல மாற்றம் தெரிகிறது. அமைச்சர் மூர்த்தி எதுவும் செய்யவில்லை என்று சொல்கின்றனர். பொதுமக்கள் அவர் குறித்து பல குற்றச்சாட்டுகளை சொல்லுகின்றனர். சாலை இல்லை, ரோடு சரியில்லை இல்லை, முறையான குடிநீர் கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர். அமைச்சர் மூர்த்தி எங்கு நிலம் வாங்கி வைத்துள்ளாரோ அங்கு தான் சாலை போடுகிறார். தற்போது கடைசி காலகட்டத்தில் தான் ஏதாவது செய்து தருவதாக சொல்கின்றனர். ஆட்சியின் முடிய போகிறது. கமிஷனை வாங்க வேண்டும் என்பதற்காக பணி செய்கிறார். தோல்வியின் பயத்தில் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியாமல் நான் கையூட்டி பெற்றதாக சொல்கிறார்கள். இங்கு தான் இருக்கிறார், நேருக்கு நேர் நான் பேசுகிறேன். எங்கே, எப்போது கேட்டுச் சொல்லுங்கள். தொழிலில் பயத்தில் என் மீது குற்றச்சாட்டு சொல்கின்றனர். நான் பாரம்பரியமான குடும்பத்தில் இருந்துவந்தவன்.

கோயிலில் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்

30, 40 வருடங்களாக வழக்கறிஞர்கள் சிறப்பான முறையில் செய்து உள்ளேன். உயர் நீதிமன்றத்தில் தவறான முறையில் எங்கேயாவது வந்து நான் ஒரு ரூபாய் வாங்கினா என்று நிரூபிக்க சொல்லுங்க... கோயிலில் சத்தியம் செய்யச் சொல்லுங்கள். மக்களுக்காக உழைத்தவன் பணத்திற்காக வரவில்லை. அமைச்சர் பயந்து போய் உள்ளார். என் ஆதரவாளர்களை மிரட்டுகிறார். அவர் எனக்கு போட்டியே இல்லை. பல சரக்கு, சேலை வாங்கி கொடுப்பது போன்ற பரிசு பொருட்களை கொடுக்கிறார். மக்களுக்கு நியாயமாக எதுவும் செய்யவில்லை. அவர் வாக்கு கேட்க தகுதி இல்லாதவர். திமுக 593 வாக்குறுதிகளை கொடுத்து எதுவுமே செய்யவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் 7அரை% இட ஒதுக்கி வாங்கிக்கொடுத்துள்ளோம். நூற்றுக்கணக்கானோர் அதில் மருத்துவம் படிக்கின்றார்கள். மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் 200 கோடி இல்லை 2000 கோடி ஆக இருக்கும். இதை விசாரணை செய்வோம். இதில் பலபேர் சிறைக்குச் செல்வார்கள். இதில் பல அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். அதிமுக வாக்குறுதிகளை பார்த்து பயந்து போய் உள்ளனர். திமுகவினர் அதனால் பொய்யான வாக்குறுதிகளை தற்போது சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். குறைந்தபட்சம் 5 ஆயிரம் வாக்குகள் அமைச்சரை விட அதிகமாக வாங்கி வெற்றி பெறுவேன். தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெறும்.