அமைச்சர் மூர்த்தி தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர்.. யார் இந்த மாங்குளம் மகேந்திரன் !

2 weeks ago 4
ARTICLE AD

மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதியில் 8 சட்ட மன்ற தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது.

அதிமுக தேர்தல் களம் 2026

தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் களத்தில் அதிமுக தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுக சார்பாக ஏற்கனவே 23 பெயர்களை கொண்ட பட்டியலை வெளியிடப்பட்டது. இதனையடுத்து தற்போது 127 பெயர்களை கொண்டபட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மதுரை முக்கிய புள்ளிகளுக்கு கேட்ட இடத்தில் சீட்

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே முக்கிய புள்ளிகளாக உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல் செல்லூர் ராஜுவிற்கு மதுரை மேற்கு தொகுதியும், திருமங்கலம் ஆர்.பி.உதயகுமாருக்கும், திருப்பரங்குன்றம் தொகுதியை ராஜன் செல்லப்பாவிற்கும் ஒதுக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக சீட் வெளியீடு

அதே போல் மேலூரில் P.பெரியபுள்ளான் (எ) செல்வத்திற்கும், மதுரை கிழக்கு தொகுதியில் மாங்குளம் K. மகேந்திரனுக்கும், சோழவந்தான் (தனி) கி. மாணிக்கத்திற்கும், மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் P. சரவணனுக்கும், உ.சிலம்பட்டி மகேந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய தொகுதி மற்றும் தெற்கு தொகுதியும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதியில் 8 சட்ட மன்ற தொகுதியில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. இதில் மதுரை கிழக்கில் மீண்டும் அமைச்சர் மூர்த்தி போட்டியிடுவார் என்ற நிலையில் வழக்கறிஞர் மாங்குளம் மகேந்திரன் அதிமுக சார்பில் களம் காண்கிறார்.

யார் இந்த வேட்பாளர் மாங்குளம் மகேந்திரன்

சொந்த ஊர் மாங்குளம் என்பதால் தனது பெயரில் சேர்ந்துக் கொண்டுள்ளார். வழக்கறிஞரான இவர், தற்போது மதுரை உத்தங்குடி பகுதியில் வசித்து வருகிறார். 42 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்திலும், ரிட், சிவில், குற்றவியல் மற்றும் வங்கி வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார்.

பதவிகள்

i) 1991 முதல் 1996 வரை, Pandian Transport Corporation, Rani Mangammal Transport Corporation மற்றும் Chennai Municipal Corporation ஆகியவற்றிற்கு ஸ்டாண்டிங் கவுன்சிலாக நியமிக்கப்பட்டார்.

ii) 1998 ஆம் ஆண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மத்திய அரசின் ஸ்டாண்டிங் கவுன்சிலாக நியமிக்கப்பட்டார்.

iii) 2001 முதல் 2004 வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் உள்ஆய்வு (Prohibition and Excise) தொடர்பான சிறப்பு அரசுத் தரப்புரைஞராக (Special Government Pleader) பணியாற்யுள்ளார்.

iv) 2004 முதல் 2006 வரை, Madurai Bench of Madras High Court-இல் முதல் சிறப்பு அரசுத் தரப்புரைஞராக (First Special Government Pleader) நியமிக்கப்பட்டுள்ளார்.

v) 05.05.2011 முதல் 12.12.2012 வரை Madurai Bench of Madras High Court-இல் சிறப்பு அரசுத் தரப்புரைஞராக (Special Government Pleader) நியமிக்கப்பட்டுள்ளார்.

vi) தற்போது அதிமுக வழக்கறிஞர் பிரிவில் துணை செயலாளராக (Deputy Secretary) பணியாற்றி வருகிறார்.

அமைச்சர் மூர்த்திக்கு எதிராக தேர்தல் களத்தில்

அதே போல் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 120 கோடி ஊழக்கு எதிரான வழக்குகளை அதிமுக சார்பில் கையாண்டார். இந்நிலையில் இவருக்கு அதிமுக சார்பில் மதுரை கிழக்கு சட்ட மன்றத்தில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை கிழக்கில் திமுக சார்பாக அமைச்சர் மூர்த்தி போட்டியிடும் போது இவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும் என தொகுதி வட்டாரங்கள் சொல்கின்றனர்.

Read Entire Article