அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த விவசாயிகள் - காரணம் இதுதான்
1 year ago 7
ARTICLE AD
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கியுள்ளனர்.
முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறத்து விழா
விவசாயிகளின் கோரிக்கை விபரம்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது ; 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையில் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.  அதனை அரசு உயர் அலுவலர்கள் பார்வையிட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் விரிவாக்க பணியாளர்கள் மூலம் கணக்கெடுத்தனர்.  அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் நிவாரணத் தொகையாக 10 கோடி ரூபாய் அறிந்தார். ஆனால் இது நாள் வரை  வேளாண்துறை அலுவலர்கள் அதனைப் பெற்றுத் தராமல் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும்.
பயிர்காப்பீட்டில் குளறுபடி
அதேபோன்று கடந்த ஆண்டு சம்பா சாகுபடி 2023-24 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டை பெற்ற காப்பீட்டு நிறுவனம், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியாக கணக்கு எடுத்து இழப்பீடு வழங்காமல், விவசாயிகளை ஏமாற்றி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனை கேட்டால் அதற்கு ஒரு காரணம் கூறி நிலங்கள் பாதிக்கப்பட்ட தனி விவசாயிகளுக்கு நாங்கள் இழப்பீடு வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். அப்போது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் 98 சதவீதம் தொகையை பெற்றுக் கொண்டு பொதுவாக கிராமத்தில் பயிர் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு செய்து கொள்ள வேண்டியதுதானே தனிநபர் பெயரில் சிட்டா, அடங்கல் ஆதார், பேங்க் புத்தகம், சர்வே எண் போன்றவை எல்லாம் எதற்காக பெற வேண்டும்? இப்படி மிகப்பெரிய மோசடியில் காப்பீட்டு நிறுவனம் ஈடுபடுவதால் அரசுக்கு தான் அவப்பெயர் வருகிறது. தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்.
விவசாயிகள் சங்க தலைவர் மீது வழக்கு
மேலும் அவர்கள் வழங்கிய மற்றொரு தனி மனுவில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு நிவாரணம் வழங்காத நிலையில், காப்பீடு கட்டியதும் ஜீரோ என்று கூறியதால் மிகுந்த வேதனைக்கு உள்ளான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சரான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்திக்க சென்று, மூன்று மணி நேரம் காக்க வைத்து பதில் கூறாத காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வேதனையோடு கலைந்தாய்வுக் கூட்டத்தில் விவசாயிகளை மூன்று மணி நேரம் காக்க வைத்து விவசாயிகளை மதிக்காமல் அமரக்கூட சொல்லாமல் இருந்ததை குறிப்பிட்ட விவசாயி அன்பழகன் மீது அவர் பேசியது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை பாலசரஸ்வதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன் அரசு அதிகாரிகளை கேவலப்படுத்தி பேசியதாகவும், விவசாயிகளை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் அரசு ஊழியர்களை கேவலமாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது என்பது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய சங்கத்தினர் மனு அளித்தார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சுற்றுச்சூழல் காவல் நிலைய மாற்றுத் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் சீர்காழி எம். பன்னீர்செல்வம், பூம்புகார் நிவேதா எம் .முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Read Entire Article