அமெரிக்கா GPS-க்கு மாற்றாக களமிறங்கிய ISRO: 100வது ராக்கெட் GSLV-F15 கவுண்டவுன் தொடங்கியது

10 months ago 7
ARTICLE AD

இஸ்ரோ , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை  செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், GSLV-F15 ராக்கெட் எப்போது விண்ணில் செலுத்தப்பட உள்ளத் என்பது குறித்தும், இதனால என்ன பயன் என்பது குறித்தும் பார்ப்போம்.

100வது ராக்கெட்:

GSLV-F15 என்பது இந்தியாவின் Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) இன் 17வது  ராக்கெட்டாகும்.மேலும், இது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, கிரையோஜினிக் இன்ஜினின் 11வது ராக்கெட்டாகும். இதுமட்டுமன்றி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ஏவுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்ணில் எப்போது?

GSLV F15 ராக்கெட்டானது , நாளை (  ஜனவரி 29 ), NVS-02 செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 06:23 மணிக்கு விண்ணில் பறக்க தயாராக உள்ளது. அதற்கான கவுண்டனும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, GSLV-F15 ராக்கெட்டாஅனது NVS-02 செயற்கைக்கோளை ஒரு புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் ( அதாவது புவிக்கு கிடைமட்டமாக சுற்றி வரும் வகையில் நிலை நிறுத்தப்படும்).

🌟 T-1 Day to launch! Witness the incredible journey of GSLV-F15/NVS-02 live!

📺 YouTube Link: https://t.co/SXo6F2PAHU (from 05:50 hours)
🗓️ Date: 29th January 2025 | Time: 6:23 Hours (IST)

Join us as we push the boundaries of space applications! 🚀

More information at:… pic.twitter.com/jnSzJ27pFo
— ISRO (@isro) January 28, 2025

பயன்கள்:

இந்த் திட்டமானது நேவிக் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்தியன் நேவிகேஷன் கன்ஸ்டலேஷன் (நேவிக்) என்பது மேப்பிங் , இடமறிதல் உள்ளிட்ட வசதிகளுக்கு இதர உலக நாடுகளை சார்ந்திருக்காமல், இந்தியாவின்  பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும். இது இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பைத் தாண்டியும், சுமார் 1500 கி.மீ தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேரம் (பிவிடி) சேவையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ள செயற்கைக்கோள்

இதன் மூலம், அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவைகளை பயன்படுத்துவது குறைந்து, உள்நாட்டு சேவையை பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், இந்தியாவின் ராணுவ ரீதியிலான பாதுகாப்பு காரணங்கள், கடல்வழி பயணங்கள் உள்ளிட்டவைகளுக்கு துல்லியமான சேவையை, ஜிபிஎஸ் வழங்கும் சேவையைவிட மேலும் துல்லியமாக வழங்குவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், அணு கடிகார சேவை உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளது.

NavIC இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS) மற்றும்  கட்டுப்படுத்தப்பட்ட சேவை Restricted Service (RS). கட்டுப்படுத்தப்பட்ட சேவையை , அனைவராலும் பயன்படுத்த முடியாது; பாதுகாப்பு காரணங்களால், அரசு மட்டுமே பயன்படுத்தும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

Also Read: TN Weather: 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை- வானிலை புது அப்டேட்.!

Read Entire Article