2026 தேர்தல் திமுக வெற்றி பெற்றால் 2027க்குள் டெல்லியில் ஆட்சி மாறும் தேர்தல் இல்லாமல் ஒரே ஆட்சி மாற்றம் நடக்கும். மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டு காலத்தில் டெல்லியில் ஆட்சி மாறி அங்கேயும் இங்கேயும் நம் ஆட்சிதான், ஆ.ராசா மேடையில் மேடை பேசினார்.

சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ரவுண்டானா அருகில் திமுக சார்பில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின், 5 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழுத் தலைவருமான எல்.இதயவர்மன் தலைமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான, எம்.பி., ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினர்.

ஆ.ராசா பேச்சு.

இக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா கூறுகையில், ஆட்சியிலும் கட்சியிலும் நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு முனைவர் சபாபதி மோகன் பங்கு உள்ளது. நான் 25 ஆண்டு காலம் டெல்லியில் இருந்திருக்கிறேன். டெல்லியில் அமைச்சராக மட்டுமல்ல எல்லா லஞ்சமும் சூது எல்லாத்தையும் அடித்து உடைத்து எரிந்து இருக்கிறேன்,

ராஜா சொல்லுகிறேன், இந்த (2026) தேர்தல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக்கூடிய தேர்தல் என்றும், இந்தியாவில் எத்தனை ஜாதி, மதம், இனம், மொழி என்பதனை அங்கீகரிப்பது மட்டுமல்ல அந்த வேற்றுமையில் ஒற்றுமை காணாம் என்பதனை எழுதப்பட்டது தான் அரசியல் சட்டம் ஆ.ராசா பேச்சு.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து விளக்கம்

அந்த அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன உரிமை?, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன உரிமை?, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு என்ன உரிமை?, நாடாளுமன்றத்திற்கு என்ன வரம்பு? சட்டமன்றத்திற்கு என்ன வரம்பு? ஊராட்சி நிர்வாகத்திற்கு என்ன வரம்பு? நாடாளுமன்றமும், சட்டமன்றமும் தவறு செய்தால் உச்ச நீதிமன்றம் எப்படி கேள்வி கேட்கணும்.

தேர்தல் அதிகாரிகளுக்கு என்ன அதிகாரம் என்ன உரிமை என்பதனை 2 ஆண்டுகள் அமர்ந்து இந்தியாவில் இத்தனை வேற்றுமை உள்ளது. அந்த வேற்றுமையில் ஒற்றுமையாய் நாம் வாழ்வது எப்படி என்பதனை சிதைத்து 2 ஆண்டுகள் எழுதப்பட்ட அரசியல் சட்டம் அனைத்தும் இன்று உள்ளே வந்து விட்டது. இதில் நாம் என்ன ஜாதி, என்ன மதம் என்பதை தாண்டி நாம் உணர்ந்திருப்பது தான் அரசியல் சட்டம் என பேசினார்.

ரெய்டுகள் நடத்தப்படலாம்

இந்த அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு பிற்படுத்தப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் இஸ்லாமியர் உள்ளிட்டோருக்கு எந்த உரிமையும் கிடையாது, எல்லாம் ஒரே மதம் ஒரே மொழி ஒரே சாப்பாடு என்பது இது இந்திய பண்பாடு, இந்துத்துவா வேறு யாரும் இருக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை காப்பாற்றக்கூடிய, ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பெருமையுடன் கூறிக்கொண்டார்.

நமக்கு இடி, இன்கம்டேக்ஸ், சி.பி.ஐ., ரெய்டுகள் என்னென்னவோ விட்டு சோதனை செய்து வருவதாகவும் இன்னும் தேர்தலுக்கு இரண்டு மாத காலம் உள்ளது. தேர்தல் நெருங்கியது., வரும் மாதத்தில் இரண்டு, அல்லது மூன்று முறை வருமானவரித்துறை ரெய்டு வரும் அது எம்.பி அல்லது எம்எல்ஏ வீடுகளில் சோதனையிட வாய்ப்பு உள்ளது.

டெல்லியில் ஆட்சி மாற்றம்

எத்தனை ரெய்டு அடித்தாலும், நாங்க உடுற ரெய்டுல, அமித்ஷாவும், மோடியும் விரைவில் காணாமல் போவார்கள். ஆகவே ராசா பேச்சு. 2026 தேர்தல் திமுக வெற்றி பெற்றால் 2027க்குள் டெல்லியில் தேர்தல் இல்லாமல் ஒரு ஆட்சி மாற்றம் நடக்கும் அந்த ஆட்சி மாற்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்கும்.

மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால், ஓராண்டு காலத்தில் டெல்லியில் ஆட்சி மாறி அங்கேயும் இங்கேயும் நம் ஆட்சி இருக்கும். அப்பொழுது தூற்றுபவர் மட்டுமல்ல இந்த தமிழ் திருநாடும் வாழும் பலம் பெறும் ஓங்கும் என‌ மேடையில் பேசினார்.

திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவரும்,பேரூர் கழக செயலாளருமான மு.தேவராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் தமிழ்மணி, மாமல்லபுரம் நகர செயலாளர் விஸ்வநாதன், திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் யுவராஜ், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.