அமித் ஷா சொன்ன அட்வைஸ்? கட் & ரைட்டாக நோ சொன்ன எடப்பாடி? ”கட்சிக்கு வேண்டாம், கூட்டணிக்கு ஓகே”

2 months ago 5
ARTICLE AD

EPS Amit Shah Meeting: அமித் ஷா உடனான சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவகாரங்களை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமித் ஷா - ஈபிஎஸ் மீட்டிங்

அண்மையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தனது சகாக்களை வைத்துக்கொண்டு நடந்த பேச்சுவார்த்தையின் போது, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தென்மாவட்ட வாக்காளர்களை கவரும் நோக்கிலான நடவடிக்கை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அதிமுக பிரமுகர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, மொழிபெயர்ப்பாளரை மட்டும் உடன் வைத்துக்கொண்டு, அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றியதாக கூறப்படுகிறது. இதில் தான் அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளதாம்.

அமித் ஷா சொன்னது என்ன?

அமித் ஷா உடனான தனி ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி பேசிய விவகாரங்கள் தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேநேரம், அது தொடர்பான சில தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன. அதன்படி, ”எடப்பாடியின் பரப்புரை பயணம் மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல் உத்தியை மாற்ற வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிரிந்து சென்றவர்களை சேர்க்காததால் 2021, 2024 தேர்தலில் அதிமுக பின்னடைவைச் சந்தித்தது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும்” என அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

கட் & ரைட்டாக சொன்ன எடப்பாடி?

அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். மேலும், “நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் கட்சியில் கோஷ்டிகள் உருவாகி குழப்பம் ஏற்படும். தன்னை முதலமைச்சர் வேட்பாளராகவே ஏற்க மறுப்பவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? தேசிய ஜனநாயக கூட்டணியில் வேண்டுமானால் அவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அதிமுகவில் சேர்க்க முடியாது. அதேநேரம், அதிமுகவில் போர்க்கொடி தூக்குபவர்களை பாஜக ஆதரிக்கக் கூடாது” என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்து என்ன?

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு எடப்பாடி தமிழகம் திரும்பிய நிலையில், இனி கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கும் என கூறப்படுகிறது. ஓபிஎஸ் டிடிவியை கூட்டணியில் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளுங்கள் என எடப்பாடி கூறியதால், அவர்களை மீண்டும் தங்களுடன் கொண்டு வரும் முயற்சிகளை பாஜக முன்னெடுக்கலாம். ஆனால், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் என வலியுறுத்தி வரும் டிடிவி மீண்டும் கூட்டணிக்குள் வருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதோடு,பேச்சுவார்த்தையில் சுமூகமான உறவு ஏதும் எட்டப்படாததால், அமித் ஷாவை மீண்டும் எடப்பாடி சந்திக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Read Entire Article