தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி 23ஆம் புலிகேசி ஆட்சி போல உள்ளது. கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு புத்தாண்டு பண்டிகையொட்டி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும். தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும் போதை கலாச்சாரம் இருக்கக்கூடாது. குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை பாதுகாப்பு இருக்க வேண்டும். ஊழல் இல்லாத ஆட்சி, சமமான ஆட்சி, உண்மையான ஆட்சி அமைய வேண்டும். உண்மையான விடியலை எடப்பாடி பழனிசாமி கொடுப்பார். எந்த முதலமைச்சரும் சாதிக்காத சாதனையை 11 மருத்துவக் கல்லூரியை தொடங்கி சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்கள், ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் எப்படி வாழ்ந்தார்களோ அதேபோல வாழ எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார்.

TVK விஜய் கட்சிக்கு கூட்டம் கூடுகிறதே என்பது குறித்த கேள்விக்கு?

சினிமா கவர்ச்சிக்கு எப்போதுமே கூட்டம் வரும். அமிதாப் பச்சன் வந்தால் கூட கூட்டம் வரும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ஊழல்

மதுரையில் 200 கோடி மாநகராட்சியில் திமுகவினர் கொள்ளையடித்துள்ளனர். இதற்கு தீர்வே இல்லை. மாநகராட்சி மேயர் இல்லாததால் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெறவில்லை. இந்த நாள் வரை மக்கள் பிரச்னை தீராமல் உள்ளது . மதுரையில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய சொல்லி இருக்கலாம். இந்த ஆட்சி 23 ஆம் புலிகேசி ஆட்சிபொழுதான் இருக்கிறது. கஞ்சா போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் Amazon, zomato, SUKHI, போல் ஆகிவிட்டது. தமிழ்நாட்டிற்கு வந்த பாவமான வட மாநில இருந்துள்ளார். இது போதாதா சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்கு. காங்கிரஸ்காரர்கள் நாட்டுக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள், இவர்கள் தற்போது உள்ளவர்கள் அல்ல. கூட்டணியில் இருந்தாலும் காங்கிரஸ்காரர்களுக்கு ஆதங்கம் இருக்கும்” என தெரிவித்தார்.