அப்பல்லோ மருத்துவமனையில் அன்புமணி ராமதாஸ்.. பாமக தலைமை பரபரப்பு அறிக்கை!Anbumani Ramadoss Admitted to Apollo Hospital for surgery

1 week ago 4
ARTICLE AD

பட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். இவர் எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவா இருப்பவர். மதுவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு எதிராக எந்த ஒரு திட்டங்களை கொண்டு வந்தாலும் முதல் நாளாக அறிக்கை வெளியிடுபவர் அன்புணி. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அன்புமணி ராமதாஸ்  முழங்கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.

அன்புமணிக்கு என்ன ஆச்சு

இந்நிலையில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ்க்கு முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதை அடுத்து ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளனர். அவரது உடல்நிலை மிகச் சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் இருப்பதாகவும் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பாமக தலைமையும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!

கால் மூட்டு அறுவை சிகிச்சை

அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. அவர்களுக்கு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று வலது கால் மூட்டில்  சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பிய அவர் நலமுடன் உள்ளார்.

ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுறுத்தல்

அடுத்த இரு வாரங்களுக்கு உடலியக்கப் பயிற்சியும் (பிசியோதெரபி) ஓய்வும் எடுக்கும்படி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article