அப்படிப்போடு.. குற்றால அருவிகளில் மிகப்பெரிய மாற்றம்.. இனி ஈஸியா இருக்கும்!

3 weeks ago 3
ARTICLE AD

தென்னகத்தின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றால அருவிகளில் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் வரப்போகும் சீசன் காலம் நிச்சயம் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் என்ற பெயரைக் கேட்டாலே நம் மனதெல்லாம் இதமாடும் அளவுக்கு நம்முள் இணைந்த ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த குற்றாலத்தில் நிறைய அருவிகள் உள்ளது. இதமான தென்றல் காற்றும், சாரல் மழையும், அருவிகளில் குளியலும் என குற்றாலம் இயற்கையின் வரப்பிரசாதம் தான்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் தண்ணீர் விழ தொடங்கி விடும். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாத காலம் சீசன் காலமாக பார்க்கப்படுகிறது. பிற மாதங்களில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து அருவிகளில் தண்ணீர் விழும்.

ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு உள்ளூர் முதல் உலக நாடுகளில் இருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். திருநெல்வேலியில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பேரூராட்சியில் பழைய குற்றாலம், மெயின் அருவி, புலி அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, பாலருவி, பழத்தோட்ட அருவி, தேனருவி என 9 அருவிகள் உள்ளது. இங்கு ஐந்தருவி செல்லும் சாலையில் படகு குழாம், தாவரவியல் பூங்கா அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குற்றாலநாதர் கோயில், சித்திர சபை, சுற்றுச்சூழல் பூங்கா என சுற்றிலும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளது.

இந்த நிலையில்  கடந்த 2024ம் ஆண்டு பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிர்பலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வனத்துறை தரப்பில் அதிக தண்ணீர் வந்தால் எச்சரிக்கை மணி ஒலிக்கும் வகையில் அலாரம் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் குற்றாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை அதிகரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்படியான நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்டமாக மெயின் அருவியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான வளைவு ஆர்ச் அகற்றப்படுகிறது. அது சிறியதாக இருப்பதால் அதிகப்படியான நபர்கள் நின்று குளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதேபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதனை அகலப்படுத்தி பயணிகள் வசதியை மேம்படுத்தும் பொருட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் சீசன் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அப்பகுதி வியாபாரிகள் எழுப்பியுள்ளனர்.

Read Entire Article