கலாம் பையோபிக்கில் தனுஷ்

சர்வதேச கான் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷின் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அப்துல் கலாம் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகிறது. ஒரு சாதாரண மனிதனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கலாம் இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாகவும் இந்தியாவின் மிஸைல் மேனாகவும் கொண்டாடப் பட்டதை இந்த படம் விவரிக்கும். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஏற்கனவே இசைஞானி இளையராஜா பையோபிக்கில் தனுஷ் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி அடுத்த கட்ட நகர்வில்லாமல் இருக்கிறது. இப்படியான நிலையில் தனுஷ் நடிக்கும் கலாம் படத்தின் அப்டேட் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு தகவல் என்றே சொல்லலாம் .

நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.