அன்றும்...இன்றும்...: காடுபோல் மண்டியிருந்த செடி, கொடிகள் அகற்றம்: ஏபிபிநாடு செய்தி எதிரொலி

2 months ago 9
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக ஓடும் பேய்வாரி வாய்க்கால் செடி, கொடிகள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது. இதை முழுமையாக தூர்வார வேண்டும் என்ற ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தூர்வாரப்படாமல் காடு போல் மண்டிக்கிடந்த செடி, கொடிகள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது.

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக பேய்வாரி வாய்க்கால் (முதலைமுத்துவாரி) ஓடுகிறது. இதன்வாயிலாக 8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள  ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பேய்வாரி வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது. கடந்த குறுவை சாகுபடியின்போது

இந்த பேய்வாரி வாய்க்கால் முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடியின் போது விவசாயிகள் சரியாக தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் மழை கை கொடுத்ததால் அறுவடைப்பணிகளை முடித்தனர். மேலும் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையாக தூர்வாராமல் செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா அல்லது காடா என்று தெரியாத அளவிற்கு மாறி இருந்தது. கடந்த டித்வா புயலின் போது தொடர்ந்து பெய்த மழையால் இந்த பேய்வாரியில் அதிகளவு தண்ணீர் ஓடியது. செடி, கொடிகள் மண்டிக்கிடந்தததால் கரை உடைப்பு ஏற்பட்டு சாகுபடி பயிர்கள் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்தனர்.

இந்த பேய்வாரி வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்கால் தற்போதைய நிலையில் சிறிய மழைக்கு கூட தாங்காது என்பது போல் மாறி காணப்பட்டது.

இந்த பேய்வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இந்த கோடைகாலத்திலேயே இந்த பேய்வாரி வாய்க்காலை குருவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி செல்லும்.

இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சரியாக தூர்வாராமல் இருந்த பகுதி முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தடையின்றி ஓடுகிறது.

இதையடுத்து செய்தி வெளியிட்டு ஏபிபிநாடு செய்தி நிறுவனத்திற்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article