சென்னையில் இந்தியா – வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு இந்தியா 515 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.

வங்கதேசத்திற்காக ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்பண்ட்:

இந்திய அணிக்காக இரண்டாவது இன்னிங்சில் ரிஷப்பண்ட் மற்றம் சுப்மன் கில் சதம் அடித்தனர். விபத்தில் சிக்கிய பிறகு உடல்நலம் தேறி இந்திய அணியில் இடம்பிடித்த ரிஷப்பண்ட் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக ஆடிய முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் அடித்து அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்து கொண்டிருந்த ரிஷப்பண்ட் வங்கதேச அணியினருக்காக ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தார். பேட்டிங் செய்த போது எதிரணியினரிடம் ஒரு ஃபீல்டரை இந்த பக்கம் நிற்க வையுங்கள் என்று கூறினார். வங்கதேச வீரர்களுக்கும் இந்தி தெரியும் என்பதால் ரிஷப்பண்ட் அவர்களிடம் இந்தியிலே கூறினார்.

Adam gilchrist said - “ People would happily pay money to watch Rishabh Pant’s batting “

He is so right 🔥🔥#RishabhPant #INDvBAN pic.twitter.com/1WfafXFtEW

— Harsh shekhawat (@wordofshekhawat) September 21, 2024

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரிஷப்பண்டின் மக்கள் ரிஷப்பண்ட் பேட்டிங்கை காசு கொடுத்து மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கிறார்கள் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருப்பது மிகவும் சரியே என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்று தோனி:

2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை பயிற்சி போட்டியின்போது வங்கதேச அணிக்கு எதிராக தோனி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது தோனி வங்கதேச வீரர்களுக்காக ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தார். கார்டிப் நகரில் நடந்த பயிற்சி போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர் ரஹ்மானிடம் பீல்டரை மாறி நிற்கச் சொல்லுமாறு தோனி அறிவுறுத்துவார்.

அன்று தோனி வங்கதேச அணிக்காக ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தது போல நேற்று ரிஷப்பண்ட் வங்கதேச அணிக்காக ஃபீல்டிங் செட் செய்து கொடுத்தார்.