அன்புமணி பதவி பறிப்பு.. பாமக தலைவர் ஆனார் ராமதாஸ்!

4 months ago 7
ARTICLE AD

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 37 புதிய தீர்மானங்கள் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மருநத்துவர் ராமதாஸிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து தலைவராக செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாமக அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற உரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கூட்டணியை உருவாக்க மருத்துவர் ராமதாஸிற்கு முழு அதிகாரம்.

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் போராட்டம்.

தமிழ்நாடு அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article