அன்பு கட்டளை... தலைவரான முதல் நாளே நயினார் சொன்ன அந்த வார்த்தை.. செருப்பு போட்ட அண்ணாமலை

8 months ago 5
ARTICLE AD

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை சபதம் ஏற்றிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற முதல் நாளே அந்த சபத்தை திரும்பப் பெறுமாறு அண்ணாமலையிடம் வலியுறுத்தியுள்ளார். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் செருப்பு அணிந்துள்ளார்.

சபதம் எடுத்த அண்ணாமலை:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே மாணவி ஒருவரை, ஞானசேகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்தார். அதோடு நிற்காமல், கவனம் ஈர்க்கும் வகையில் தன்னை தானே சாட்டையிலும் அடித்து கொண்டார். கடந்த 4 மாதங்களாக அவர் செருப்பு அணியாமல் இருந்து வந்தார்.

தலைவரான நயினாரின் அன்பு கட்டளை:

இந்த நிலையில், நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற உடனே, செருப்பு அணியும்படி அண்ணாமலைக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையும் செருப்பு அணிந்துள்ளார்.

Read Entire Article