அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு...!

1 year ago 15
ARTICLE AD

பிரசித்தி பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபாட்டு சென்றனர்.

ராம பக்தனான அனுமனை வழிபடுபவர்களுக்கு அவர் என்றும் துணையாக இருந்து காப்பார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனுமனின் அவதார தினத்தில் அவரை வழிபடுவது மிக மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆகையால் மார்கழி மாதத்தில் வரக் கூடிய மிக சிறப்பான நாட்களில் ஒன்றாக அனுமன் ஜெயந்தி போற்றப்படுகிறது. இந்நாளில் ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு அனுமனின் அருளுடன், பெருமாளின் அருளும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்  ஆண்டு தோறும் மார்கழி மாதம், அமாவாசை, மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா நாடுமுழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெறுகிறது.

Sabarimala temple: மகர விளக்கு பூஜை... சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது.

TVK Vijay : ஆளுநரை சந்தித்த விஜய்! களேபரமான தமிழக அரசியல்.. யார் ஆதரவு? யார் எதிர்ப்பு?

கோயில் தல வரலாறு

மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம் ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தல வரலாறு.

Shastra 2025: 130 அரங்குகளில் 80 நிகழ்வுகளுடன் சாஸ்த்ரா விழா: ஐஐடி சென்னை அசத்தல் அறிவிப்பு!

அனுமன் ஜெயந்தி விழா

எனவே இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து, சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Read Entire Article