அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... வந்ததே:  யாருக்கு தெரியுங்களா?

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: கால பயணங்கள் தடுமாறலாம், நாம் கண்ட கனவுகள் மாறியும் போகலாம். நினைவுகளின் மாற்றங்கள் நம்மை நிலை குலைய செய்யலாம் ஆனால் நாம் அன்பாய் பழகிய அந்த நாட்கள் “நட்பு” என்ற சக்கரத்தில் என்றும் நிற்காமல் சுழலும் என்பதை நிரூபித்த நிகழ்வு ஒன்று ஒரத்தநாட்டில் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1995ல் 12ம் வகுப்பு பயின்ற மாணவிகள் ஒன்று கூடி தங்கள் தோழிகளுடன், ஆசிரியர்களை சந்தித்த நெகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. என்னுடைய சோகத்தை உன்னிடம் கொட்டி என் மனதின் பாரத்தை உன் தோள்களில் சுமக்க வைத்து நீ அளித்த நம்பிக்கை எனும் விதையை என்னில் தூவி, வளர செய்து வெற்றி எனும் சாகுபடியை எனக்கு அறிய செய்த நம் நட்பு என்ற மரம் இன்று மீண்டும் துளிர்த்து செழித்து வளர்கிறது என்று நெஞ்சம் நிறைந்த தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நிகழ்வு அது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994 -1995 ல் 12 ம் வகுப்பு பயின்ற மாணவிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி பெற்றோர் சங்க தலைவர் முகம்மது கனி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாணவியும், இன்னாள் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியையுமான அனுராதா முன்னிலை வகித்து வரவேற்புரையாற்றினார்.

முன்னாள் தலைமையாசிரியர் நடராஜன், ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், வெற்றிவேந்தன், ஆசிரியைகள் முடியரசி, ஜெயந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஆசிரியைகளுக்கும், முன்னாள் மாணவிகளுக்கும், முன்னாள் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றிய போது கண்கள் கலங்கின. நெஞ்சம் நிறைந்து நெகிழ்ந்தது. அங்கு அன்பும், நட்பும், ஆசிரியர் மீதான மரியாதையும் கலந்த மகிழ்ச்சி ஆறு பெருக்கெடுத்து ஓடியது என்றால் மிகையில்லை.

முன்னாள் மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு பீரோ ஒன்று நினைவு பரிசாக பெற்றோர் சங்க தலைவர் முகம்மது கனியிடம் வழங்கினார்கள். 1994 -1995 ல் 12ம் வகுப்பு பயின்ற மாணவிகள் முன்னாள் ஆசிரிய, ஆசிரியைகளுக்கும், இன்னாள் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் சிறப்பு செய்து கவுரவித்து நன்றி கூறினார். இந்த நிகழ்வு தங்கள் நெஞ்சத்தில் என்றும், என்றென்றும் நிறைந்து இருக்கும்.

காற்று வீசுவதை உணர முடியும் ஆனால் பார்வையால் அதை பார்க்க முடியாது. நீரின் வேகத்தை கண்ணால் காண முடியும் ஆனால் கைகளால் அதை நிறுத்த முடியாது. வானின் அழகை ரசிக்க முடியும். ஆனால் அதனை நம்மால் எட்டிக் கூட தொட முடியாது. மின்னலை கண்ணால் காண முடியும் ஆனால் அதை நாம்முன்கூட்டியே அறிய முடியாது. ஆனால் நட்பு என்ற வலுவான பிணைப்பில் மட்டுமே இவை அனைத்தும் மாறி மாறி நடக்கும். பிரிவு என்ற ஒன்று நட்பு என்ற அகராதியில் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் தங்களின் தோழிகளை கண்டு வகுப்பறை அலப்பறைகளையும், தங்கள் கனவுகளையும் மீண்டும் பகிர்ந்து கொண்டனர் முன்னாள் மாணவிகள்.

வானத்திற்கு சொந்தம் நட்சத்திரங்கள், மலருக்கு சொந்தம் வண்ணத்து பூச்சிகள், காற்றுக்கு சொந்தம் தென்றல், நட்பிற்கு சொந்தம் நல்ல நினைவுகள் எங்கள் அனைவருக்கும் சொந்தம் இந்த பள்ளி என்று தோழிகளை பிரிந்து செல்ல மனமின்றி கலங்கிய கண்களுடன் விடை பெற்றனர்.

Read Entire Article