அதிர்ஷ்ட கூப்பன் மோசடி! மலிவு விலையில் பொருட்கள் என ஏமாந்த பெண்கள் - 10 பேர் கைது

2 months ago 5
ARTICLE AD

விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் நூதன முறையில் பெண்களிடம் சிறப்பு சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த 10 வாலிபர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் நூதன முறையில் பெண்களிடம் சிறப்பு சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து பல லட்ச ரூபாய் மோசடி செய்த 10 வாலிபர்கள் கைது செய்தனர். தென்காசி,சேலம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மணிகண்டன், உதயசூரியன், தினேஷ், முத்துக்குமார், சண்முக நகுலன், வனராஜா, மோகன்ராஜ், உதயகுமார், முத்து மாரியப்பன், கோபி இந்த 10 நபர்களும் நண்பர்கள் ஆவர். இவர்கள் தள்ளுபடி விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆன கேஸ் ஸ்டவ், மிக்ஸி ஆகிய பொருட்களை விற்பனை செய்து பல்வேறு இடங்களில் பெண்களிடம் மோசடி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நபர்கள் கடந்த வாரம் புதுவை மாநிலம் ஒட்டிய தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் வாடகைக்கு தங்கி உள்ளனர். இவர்கள் அங்கிருந்து அவர்களுக்கு சொந்தமான ஆம்னி வேன் மற்றும் இரண்டு சக்கர இரண்டு சக்கர வாகனங்களில் வீட்டு உபயோக பொருட்களை கிராமங்களுக்கு எடுத்துச் சென்று அங்குள்ள பெண்களிடம் நாங்கள் வைத்துள்ள பொருட்களின் மொத்த விலை ரூ 10,700 ஆகும்.

ஆனால் நாங்கள் ஒரு அதிர்ஷ்ட கூப்பன்களை உங்களிடம் வழங்குவோம். அந்த கூப்பன் களில் உள்ள வட்டமிட்டு இருக்கும் பகுதியில் கைகளால் தேய்த்தால் ஸ்டார் வரும். இந்த ஸ்டார் வந்தால் அந்த கூப்பன் அதிர்ஷ்ட கூப்பன் இல்லை. ஆனால் அதில் சில எண்கள் இருக்கும். இதுபோல் எங்கள் வந்தால் அது அதிர்ஷ்ட கூப்பன்கள் ஆகும். இந்த அதிர்ஷ்ட கூப்பன் உள்ளவர்களுக்கு ரூ 10,700 விலைமதிப்புள்ள பொருட்களை தள்ளுபடி விலையில் ரூ 6700 க்கு கொடுப்போம் என கூறி மரக்காணம் அருகே செட்டிகுப்பம் கிராமத்தில் நேற்று விற்பனை செய்து உள்ளனர். இவர்கள் கூறியது போல் அதிர்ஷ்ட கூப்பன் வந்தவர்கள் ரூ 6 700 செலுத்தி கேஸ் ஸ்டவ், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை வாங்கி உள்ளனர். ஒரு சிலர் பொருட்களை பிரித்து பார்த்து உள்ளனர்.

அப்போது அந்தப் பொருளில் கூடுதலாக ஒரு ஜதை கொலுசு இருந்துள்ளது. இந்த கொலுசு பற்றி விற்பனை செய்தவர்களிடம் அங்கிருந்த பெண்கள் கேட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வாலிபர்கள் எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்ணுக்கு இந்த மாதம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலர் பயன்பெறும் வகையில் இது போன்ற பொருட்களில் ஒரு சிலவற்றில் மட்டும் இந்த வெள்ளி கொலுசு இருக்கும். இந்த வெள்ளி கொலுசுக்கு நீங்கள் பணம் தர வேண்டாம். நீங்கள் எங்களது தள்ளுபடி விலைப் பொருளான அதற்கு மட்டும் ரூ 6700 செலுத்தினால் போதும் என கூறியுள்ளனர்.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடி விலையில் உள்ள பொருட்களை வாங்கி உள்ளனர். அவர்கள் வாங்கிய அனைத்து பொருட்களிலுமே வெள்ளி கொலுசு இருந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் அந்த கொலுசை அருகில் இருந்த அடகு கடைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது அந்த கொலுசு வெள்ளி இல்லை. அது திருவிழாக்களில் விற்கப்படும் பித்தளை கொலுசு என வட்டிக்கடைக்காரர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சப் இன்ஸ்பெக்டர்கள் திவாகர், ராஜாராம், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோசடி செய்து பொருட்களை விற்றவர்களை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய ஓம்னி வேன், 2 இருசக்கர வாகனங்கள், 20 ஜதைக்கும் மேற்பட்ட போலி கொலுசுகள், மிக்ஸி, கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article