அதிர்ச்சியை ஏற்படுத்திய செங்கிப்பட்டி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நேற்று இரவு பயணிகளை இறக்கி விட நின்ற அரசு பேருந்து மீது எதிரில் கர்நாடகாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்த சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது செங்கிப்பட்டி. இங்குள்ள மேம்பாலத்தின் மேலே பகுதியில் தார் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மேம்பாலத்தில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் தற்போது ஒரு வழிப் பாதையில் சென்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் இருந்து வலதுபுறம் திரும்பி மேம்பாலம் ஒருவழிபாதையில் ஏறி சென்றது. மேம்பாலம் முடிவில் இடதுபுறமாக பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றது. அப்போது எதிரே கர்நாடகாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வேன் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது அந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த வேனில் 11 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.

பேருந்து மீது வேன் மோதியதால் பயணிகள் அலறி கூச்சல் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடன் அங்கு விரைந்து வந்து விபத்து  நடந்ததை அறிந்து போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீயணைப்பு துறை வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கர்நாடகா சுற்றுலா வேனில் வந்த 11 பேரில் பெங்களூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த பவுல் என்பவரின் மகன்கள் ஜான் போஸ்கோ (58), சால்ஸ் என்பவரின் மனைவி நளினி (45), வேன் டிரைவர் ஜெகதீசன் (45), செல்சியா ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆரோக்கியதாஸ் (48) இறந்தார். மேலும் வேனில் வந்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை, இரண்டு ஆண்கள் என மொத்தம் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சால்ஸ் என்பவர் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. பஸ்சில் பயணம் செய்த, பரமேஸ்வரி(52),பவித்ரா (23) ஆகிய இருவர் காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் இறந்த 4 பேரின் உடல்கள் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 2 பேரின் உடல்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் எஸ்.பி., ராஜாராம், திருவையாறு டி.எஸ்.பி., அருள்மொழி அரசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபரிகளிடம் கூறியதாவது:

செங்கிப்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் 2 கி.மீ. வீதம் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்தில் பணி நடைபெறுகிறது. அதனால் அந்த இடத்தில் ஒரு பக்கம் மூடி வைக்கப்பட்டு, மற்றொரு பக்கத்தில் இருபுறம் செல்லக்கூடிய வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வாகனம் நின்று கொண்டிருக்கையில், மற்றொரு வாகனம் வந்து மோதியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில்தான் முழு விவரங்கள் தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article