அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?

2 weeks ago 3
ARTICLE AD

திருப்பத்தூரில் அதிமுகவில் இருந்த முன்னாள் சேர்மன் திருப்பதி தவெகவில் இணைய ஆலோசனை செய்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி, ஏரிக்கோடி பகுதியில் வசிக்கும் அதிமுக ஒன்றிய தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் திருப்பதி கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்து வருகிறார். இந்த நிலையில், நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமான தாக்கல் செய்திருந்தார். ஆனால், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை அமமுக கூட்டணிக் கட்சிக்கு அதிமுக தலைமை ஒதுக்கி உள்ளது. இதனால் அப்செட் ஆன திருப்பத்தூர் தொகுதி மக்கள் டாக்டர் திருப்பதிக்குதான் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இருந்தபோதிலும் அதிமுக தலைமை இதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், திருப்பத்தூர் ஒன்றிய மக்கள் ஒன்று கூடி நீங்கள் சுயேட்சை வேட்பாளராக நில்லுங்கள் அல்லது மாற்றுக் கட்சிக்கு செல்லுங்கள் என்று கோரிக்கை வைத்து உள்ளனர். பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையுங்கள் என்று கோரிக்கை வைத்ததால் இது குறித்து உரிய ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று ஒன்றிய செயலாளர் திருப்பதி தெரிவித்த நிலையில் மக்கள் அனைவரும் அங்கிருந்து கனிந்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உதகை மற்றும் நாகர்கோவில் தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்கியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்ததந்த தொகுதிகளில் அதிமுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் அடுத்தடுத்து வெடிக்கும் கோஷ்டி பூசலால் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

Read Entire Article