அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!

10 months ago 13
ARTICLE AD

விழுப்புரம் : பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக சீமான் பேசி வருவதாகவும், இது தேவையற்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலை வேறொரு திசையைநோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார், அது தமிழகத்திற்கு நல்லது இல்லை என விசிக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்னைக்கு எதிராக விசிக சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது, இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுத்திய அவர் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது முதலமைச்சரும் நிதி தரவேண்டுமென வலியுறுத்திருக்கிறார். இனிமேல் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

பெரியார் இல்லையென்றால் அதிகளவு விவசாயிகள் இருந்திருப்பார் என செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன் பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக பேசி

வருவதாகவும், இது தேவையற்ற சர்ச்சை தமிழ்நாடு அரசியலை வேறொரு திசையைநோக்கி மடைமாற்றம் செய்ய விரும்புகிறார்.அது தமிழகத்திற்கு நல்லது இல்லை என சுட்டி காட்ட விரும்புவதாக தெரிவித்தார். நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் அதனை திரும்ப பெற வேண்டும் நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.

அதிமுக பாஜக கூட்டணி இன்னும் உறுதி படுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் ஒட்டாமல் உள்ளார்கள் என்பதற்காக என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article