அதிமுக-தவெக கூட்டணி Deal Over.! கைகோர்க்கும் இபிஎஸ் , விஜய்?..சாதித்து காட்டிய முக்கிய புள்ளி

10 months ago 7
ARTICLE AD

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன.  வழக்கமாக திமுக -அதிமுக இடையே தான் கடுமையான போட்டி ஏற்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து கட்சியையே சிதைத்துவிட்டன. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு அதிமுகவுக்கு கூட்டணி பலம் அவசியம். குறிப்பாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் அதிமுக எதிர்கொண்டது. ஆனால் அதன்பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இபிஎஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய பாஜக விருப்பம் காட்டி வருகிறது. ஆனால் அண்ணாமலை இருக்கும்வரை அது நடக்காது என இபிஎஸ் ஸ்ட்ரிட்டாக நோ சொல்லிவருகிறார். அதே சமயம் அண்ணாமலைக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைய விருப்பமில்லை என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Also Read: Maha Kumbh Mela-Nasa: விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா.! கிளிக் செய்த இஸ்ரோ, நாசா...

ஆக பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் எடப்பாடி ஸ்ட்ராங்காக இருப்பதை பார்த்தால் அவருக்கு வேறொரு பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். விஜய்யின் தவெக தான் எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி சாய்ஸ் என கூறப்படுகிறது. கட்சி தொடங்கியதில் இருந்தே விஜய் அதிமுகவை விமர்சனம் செய்யாமல் இருந்து வருவது, எடப்பாடியும் விஜய் குறித்த கேள்விகளை சாஃப்டாக டீல் செய்வது என மறைமுகமாக இருவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட அதிமுக ஜெயக்குமார் விஜய் எங்க எதிரி இல்லை என நேரடியாகவே தெரிவித்தார். மேலும் விஜய்க்கு இந்த கூட்டணி ப்ளானை போட்டு கொடுத்ததே வாய்ஸ் ஆஃப் காமன்  நிறுவனரும் முன்னாள் விசிக பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா தான் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரே அதிமுக மற்றும் விஜய்க்கு இடையே பாலமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் தவெகவுக்கு 60 சீட்டும் துணை முதல்வர் பதவியும் வழங்குமாறு எடப்பாடிக்கு கண்டிசன் போட்டுள்ளாராம். ஆனால் 60 சீட் சாத்தியமில்லை 40 கொடுக்கலாம் என எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தால் இந்த அதிமுக தவெக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article