அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி

3 weeks ago 3
ARTICLE AD

தமிழ்நாட்டின் பாரம்பரிய கிராமிய இசையையும், மக்கள் கலையையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரான புஷ்பவனம் குப்புசாமியை, இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இயல் இசை நாடக துறை

தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பெற்றது.

புஷ்பவனம் குப்புசாமிக்கு பொறுப்பு

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை இயல், இசை, நாடக மன்றத்தில் தலைவராக நியமித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தனக்கு இப்பொறுப்பு வழங்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்த்த புஷ்பவனம் குப்புசாமி, அது கிடைக்காமல் போனதால் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்.

அன்று சிந்திய கண்ணீர்

அப்போது இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, “தமிழ் பாடல்களை மட்டுமே பாடும் ஒரு கலைஞன், கிராமத்தான் என்ற காரணத்திற்காக எனக்கு இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது என்றால் இனி எந்த கிராமத்தானுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். எனக்கு நேர்ந்த இதனை பார்த்து இனி எந்த பிள்ளைகள் தமிழை கற்க முன் வருவார்கள்” இவ்வாறு ஆவேசத்துடன் கண்ணீர் மல்க பேசினார்.

மக்கள் இசை கலைஞன்

தமிழ் சினிமாவில் மக்கள் இசை கலைஞர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. அதில், புஷ்பவனம் குப்புசாமி ஒரு தவிர்க்க முடியாத கலைஞர் என்று சொன்னால் மிகையாகாது. 1995 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை பாடி வரும் புஷ்பவனம் குப்புசாமி, இளையராஜா தொடங்கி அனிருத் வரை 3 தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். தனது காந்த குரலால் பல தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளார். சமீபத்தில் தனுஷின் இட்லி கடை படத்தில் இவர் பாடிய எத்தன சாமி பாடல் இன்ஸ்டா முதல் ட்விட்டர் அவரை அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி GEN Z ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமின்றி, தனது மனவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல மக்கள் இசை நிகழ்ச்சிகளையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

அங்கீகாரம் தந்த தவெக அரசு

அன்று 2018 ஆம் ஆண்டு ஆதங்கத்துடன் கண்ணீர் மல்க பேசிய புஷ்பவனம் குப்புசாமிக்கு இன்றைய தவெக ஆட்சியில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இசையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் சிறந்து விளங்கி வ்வரும் புஷ்பவனம் குப்புசாமிக்கு, இப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மக்கள் இசை கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை வழக்கியிருக்கிறது. மேலும், சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் புஷ்பவனம் குப்புசாமி தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சருக்கு நன்றி

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்பவனம் குப்புசாமி விரைவில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article