சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனம் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே நடந்த விபத்து

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெகதீஸ்வரி. இவர் தமிழ்நாடு அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். இதனிடையே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதில் தினமும் தவறாமல் கலந்துக் கொண்டார். கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை வந்ததால் தனது சொந்த சொகுதிக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்றிருந்த நிலையில் இன்று சட்டப்பேரவை உள்ளதால் நேற்றிரவு காரில் சென்னை புறப்பட்டார்.

போலீஸ் பாதுகாப்பு வாகனம் முன்செல்ல பின்னால் அமைச்சர் ஜெகதீஸ்வரி பயணம் செய்த அரசு வாகனம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் சொந்த வாகனம் 3வதாக வந்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான காட்டாங்குளத்தூர் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக ஜெகதீஸ்வரியின் சொந்த வாகனம் இரு சக்கர வாகனத்துடன் மோதியது.

இந்த கோர விபத்தில் ஹோண்டா டியோ வாகனத்தில் வந்த 26 வயது இளைஞர் இறையன்பு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காட்டாங்குளத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அமைச்சரின் சொந்த வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்ததா அல்லது கார், பைக் யார் மேல் தப்பு என்ற ரீதியில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவை முதல்வர் பதிலுரை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை (செப்டம்பர் 8) முடிவடைய உள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்காக அத்தனை தவெக எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவை மூன்று நாட்களுக்குப் பின் விரைந்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது.