அதிகாலையில் அம்மாப்பேட்டை மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: என்ன தெரியுங்களா?

1 month ago 3
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்கு வழிச்சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற பேராலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வேளாங்கண்ணிக்கு வந்து செல்கின்றனர்.

பேருந்துகள், ரயில்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வருகை தருவதால், நாகை – தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தஞ்சாவூர் – நாகை வழித்தடத்தில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்து தஞ்சாவூர் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்தை கரூர் மாவட்டம் குளித்தலை ரங்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆரோக்கியத்தின் மகன் சவரிராஜன் (43) ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம் ஆச்சலூர் வடக்கு கல்லப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டியின் மகன் அன்பழகன் (58) நடத்துநராக பணியாற்றி வந்தார்.

பேருந்து அதிகாலை சுமார் 4 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை நான்கு வழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலையோரமாகச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

விபத்தில் லால்குடி தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் ஜான்பீட்டர் (40), கோனக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் செபஸ்டின் (34), குன்னம் கீழப்பழூரைச் சேர்ந்த இளையராஜாவின் மனைவி சாம்ளா (37), தச்சங்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி ராணி (60) உள்ளிட்ட 15 பயணிகள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் உடனடியாக வெளியேற்றி, 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணம் செய்து வரும் நிலையில், அதிகாலை நேரத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article